கிருஷ்ணகிரி: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்ததாகக் கூறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று கணவனை மனைவி மற்றும் அவரது காதலன் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில், யாசினி (20) கோயிலுக்கு செல்லும் வழியிலேயே தனது காதலன் யுகேந்தர் (20)-க்கு லைவ் லொகேஷன் அனுப்பி வரவழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு,
Author: vnewstamil
ஆயுள் சிறைவாசிகளின் முன்விடுதலை: காத்திருப்போரின் கண்ணீருக்கு அரசு கருணை காட்டுமா?
சிறப்புக் கட்டுரை ஒரு குற்றத்திற்காக வழங்கப்படும் தண்டனை, அந்த நபரின் வாழ்நாள் முழுவதையும் நம்பிக்கையின்றி முடக்கிவிடக் கூடாது என்பதே இந்திய நீதித்துறையின் அடிப்படை மனிதநேயக் கொள்கையாகும். தண்டனையின் நோக்கம் பழிவாங்குவது அல்ல; குற்றவாளியைத் திருத்தி, மீண்டும் சமூகத்தில் நல்ல குடிமகனாக வாழ வழிவகை செய்வதுதான். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 72 மற்றும் 161, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் (CrPC) பிரிவுகள் 432, 433, 433A ஆகியவை, குறிப்பிட்ட நிபந்தனைகளின்
சிறைக் காவலர்கள் 3 பேர் கைது: கைதி மரண வழக்கில் அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த கைதி சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிறை வார்டன் உட்பட மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைகள், கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் இருந்ததோடு, வலது கையில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடற்கூறாய்வு அறிக்கையைத் தொடர்ந்து,
திமுக நிர்வாகி மீது கொலை முயற்சி: 3 பேர் கைது
சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி ராஜா (45) மீது வீட்டு வாசலிலேயே அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜா உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (44), ரஞ்சித் (33),
உயிர்தப்பிய இளம் பெண் – மாஞ்சா நூலால்.
திருவொற்றியூரில் பரபரப்பு சென்னை: திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற இளம் பெண்ணின் முகத்தில் திடீரென குறுக்கே வந்த மாஞ்சா நூல் மூக்குப் பகுதியில் அறுத்து காயம் ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வலியால் அவதிப்பட்டாலும், தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தமிழகத்தில் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை அமலில் இருந்தாலும், சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால் அடிக்கடி விபத்துகள்
பட்டப்பகலில் வீட்டின் பின்கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை; வாலிபர் கைது.
சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 29-ஆம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பூஜை அறையில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு
ரூ.20 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது
சென்னையில் குறைந்த விலையில் தங்கக்காசுகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் இருந்து சுமார் ரூ.20 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஷீலா மேரியை போலீசார் கைது செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கக்காசுகள் கிடைக்கச் செய்வதாக நம்பிக்கை அளித்து, பல்வேறு நபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு
ஈ தொல்லையால் மக்கள் அவதி: மாநகராட்சி தீவிர நடவடிக்கை:
சென்னை, ஜூலை 6: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 38-வது வார்டு பகுதிகளான வினோபா நகர், ராஜசேகர் நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஈ தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர். இதையடுத்து, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் மலேரியா பிரிவு ஊழியர்கள் அப்பகுதிகளில் தீவிர சுகாதாரப் பணியில் ஈடுபட்டு, ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஈ மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர். இந்த நடவடிக்கையால் ஈ தொல்லை குறைந்து, நோய் பரவலைத் தடுக்கவும்
கணவருக்கு தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கூலிப்படையால் கொலை; மனைவி, காதலன் கைது.
ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில், கணவரின் உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்கமடையச் செய்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை வாழ்ந்த அப்பலநாயுடு, மனைவி ஹேமாவின் திருமணத்திற்குப் புறம்பான உறவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹேமாவும் அவரது காதலன் கங்காதரும் இணைந்து கொலைத் திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தூக்கத்தில் இருந்த அப்பலநாயுடுவை கூலிப்படையினர் கழுத்தை
புழல் சிறையில் ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய சதி!
சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி வெள்ளைக்காளியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கொலை சதிக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் ரவுடி லாலி மணிகண்டன் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். அவருடன் தொடர்புடைய மேலும் 3 பேரும் சதியில் தொடர்புடையவர்கள் என தெரியவந்த நிலையில், அவர்கள் கடலூர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக சிறைத்துறை மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

