திருவொற்றியூரில் பரபரப்பு
சென்னை: திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற இளம் பெண்ணின் முகத்தில் திடீரென குறுக்கே வந்த மாஞ்சா நூல் மூக்குப் பகுதியில் அறுத்து காயம் ஏற்படுத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வலியால் அவதிப்பட்டாலும், தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
தமிழகத்தில் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை அமலில் இருந்தாலும், சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் நீடித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

