ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில், கணவரின் உணவில் தூக்க மாத்திரை கலந்து மயக்கமடையச் செய்த மனைவி, காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
10 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை வாழ்ந்த அப்பலநாயுடு, மனைவி ஹேமாவின் திருமணத்திற்குப் புறம்பான உறவை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஹேமாவும் அவரது காதலன் கங்காதரும் இணைந்து கொலைத் திட்டம் தீட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தூக்கத்தில் இருந்த அப்பலநாயுடுவை கூலிப்படையினர் கழுத்தை நெரித்தும், இரும்புக் கம்பியால் தாக்கியும் கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் ஹேமாவும் கங்காதரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள கூலிப்படையைச் சேர்ந்த மூவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

