சென்னை திருவொற்றியூர் பகுதியில் சாலையில் வைத்து பிரதீப் என்ற இளைஞர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர்கள் பிரதீப்பை தாக்கி, அவரது தலையை சிதைக்கும் வகையில் கொடூரமாக கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
Category: குற்றம்
குற்ற வழக்குகளில் காரணங்களை முறையாக குறிப்பிடாமல் கைது செய்வதா? காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்!
சென்னை: குற்ற வழக்குகளில் கைதுக்கான காரணங்களை முறையாக குறிப்பிடாமல், இயந்திரத்தனமான முறையில் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கைது நடவடிக்கைகளின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து காவல்துறையினருக்கு தெளிவான புதிய வழிகாட்டுதல்களை உருவாக்கி பிறப்பிக்க, தமிழக காவல்துறை டிஜிபிக்கு (DGP) உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றச்சாட்டின் தன்மை, கைது செய்ய வேண்டிய அவசியம் உள்ளிட்ட அம்சங்களை முறையாக பரிசீலித்து, சட்ட விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே
மழை வடிகால் கழிவுகள் உடனடியாக அகற்ற கோரிக்கை நோய்த்தொற்று அபாயம்:
சென்னை: வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுகளை ஊழியர்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வடிகால் கால்வாய்களில் இருந்து அள்ளப்படும் கழிவுகள் சாக்கு மூட்டைகளில் கட்டப்பட்டு, அப்பகுதிகளில் நடைபாதைகளில் வைக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த கழிவுகள் சில நாட்களுக்குப் பிறகு சாக்கு மூட்டைகளில் இருந்து வெளியேறி சாலைகளிலும் நடைபாதைகளிலும் சிதறுவதுடன், கடும் துர்நாற்றமும் வீசுவதாக கூறப்படுகிறது. இதனால்
10ஆம் வகுப்பு மாணவிக்கு ஆண் குழந்தை! மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி?
திருச்சி பொன்மலைப்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 10ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி பள்ளி விடுதியில் ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் பள்ளி நிர்வாகம் மாணவியை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது. மாணவி கர்ப்பமாக இருந்தது பள்ளி நிர்வாகத்தின் கவனத்திற்கு வராமல் போனது எப்படி? என்பது குறித்து பள்ளிக் கல்வித் துறை விசாரணையைத்
ரூ.4 ஆயிரம் கட்டிய வீட்டுக்கு ரூ.20 ஆயிரம் கணக்கு — பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சென்னை, தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வழக்கமாக செலுத்தி வந்த மின்கட்டணத்தைவிட தற்போது பல மடங்கு அதிகமாக மின்கணக்கு வந்துள்ளதாக கூறி பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “வழக்கமான மின்கட்டணத்தைவிட பல மடங்கு அதிகமாக கணக்கு போடுவது ஏன்?” என கண்டன முழக்கங்களை எழுப்பினர். ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்வு இதுகுறித்து பொதுமக்கள்
சிறைவாசிகளின் உணவு, மருத்துவம், நிர்வாகம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார் — சிறைகளில் மனித உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என முன்னாள் சிறைவாசிகள் கோரிக்கை!
சென்னை புழல் மத்திய சிறைச்சாலையில் முதல்-அமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் உணவு, மருத்துவ வசதிகள், சிறை நிர்வாகத்தின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து சிறைத்துறை அதிகாரிகளிடம் அவர் கேட்டு அறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் மத்திய சிறைகள், கிளைச் சிறைகள் உள்ளிட்ட பல்வேறு சிறைச்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஆயிரக்கணக்கான சிறைவாசிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறைவாசிகளும் மனிதர்களே! சட்டப்படி தண்டனை அனுபவிக்கும் ஒருவரின் சுதந்திரம் மட்டுமே
பிரியாணியில் புழு: வாடிக்கையாளர் அதிர்ச்சி! கடை உரிமையாளரிடம் தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை என புகார் — போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என ஆதங்கம்
சென்னை: சென்னை சிட்கோ 2-வது பிரதான சாலையில் இயங்கி வரும் எஸ்.எஸ். ஹைதராபாத் பிரியாணி உணவகத்தில் வாங்கிய பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். சிட்கோ 2-வது பிரதான சாலையில் உள்ள அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் ஒருவர் பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அப்போது பிரியாணியில் புழு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், உடனடியாக உணவக நிர்வாகத்திடம் இதுகுறித்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால், தனது புகாரை
காலிஃபிளவர் தடை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் கேள்வி!
ஒரு சில ஓட்டல்களில் புகார் வந்ததற்காக ஒட்டுமொத்த ஓட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்குத் தடை விதிப்பதா? திருமலை திருப்பதியில் உள்ள ஓட்டல்களில் காலிஃபிளவர் உணவு வகைகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சில ஓட்டல்களில் காலிஃபிளவரில் புழுக்கள் இருந்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கோபி ரைஸ், காலிஃபிளவர் பக்கோடா, மஞ்சூரியன் உள்ளிட்ட காலிஃபிளவர் உணவு வகைகளை ஓட்டல்களில் தயாரித்து விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை
புழல் மத்திய சிறையில் சிறைவாசிகளின் அருகே கோழிப்பண்ணை! துர்நாற்றம்… சுகாதார அச்சம்… தொற்று நோய் அபாயம்? — உடனடியாக அகற்ற சிறைவாசிகள் கோரிக்கை! சிறைவாசிகளின் சுகாதார உரிமையை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில், தண்டனை சிறைச்சாலைக்குள் சிறைவாசிகள் தங்கும் பகுதிகளுக்கு அருகாமையில் கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களுக்கு கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், சுகாதார பாதிப்புகள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சிறைவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். புழல் சிறை வளாகத்தில் மத்திய சிறை–I, மத்திய சிறை–II மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சுமார்
மக்கள் பாதுகாப்பை விட அரசியல் நிகழ்ச்சிகளா? — ஆர்.கே. நகரில் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்கள் சரமாரி கேள்வி!
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளும், மூடி இல்லாமல் காணப்படும் மழைநீர் வடிகால்வாய்களும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மழைக்காலங்களில் சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் இதுபோன்ற ஆபத்தான நிலை நீடிப்பது ஏன் அதிகாரிகளின் கவனத்திற்கு வரவில்லை? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருபுறம் “தெருவுக்கு நான்கு கட்சிகள்” என்ற அளவுக்கு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்

