ராணிப்பேட்டை, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகை அடகு தொழில் புரிவோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் காலத்தில் பண பரிவர்த்தனை மற்றும் நகை அடகு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
Author: vnewstamil
சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கொசுப்புழு ஒழிப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கொசுப்புழு ஒழிப்பு தீவிரம். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கொசுப்புழு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. சாக்கடை தண்ணீரில் கொசுக்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பகுதிநேர ஆய்வுகள் நடத்தப்பட்டு, பாதாள சாக்கடை மூடிகள், நீர் தேங்கும்
மருத்துவர் இல்லாததால் சிறுவன் உயிரிழப்பு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிநேரத்தில் மருத்துவர் இல்லாததால், நான்கரை வயது சிறுவன் உயிரிழந்ததாக பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது. உடல்நலக் குறைவு ஏற்பட்ட சிறுவனை குடும்பத்தினர் அவசரமாக கண்ணனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றபோது, அங்கு மருத்துவர் பணியில் இல்லாததாக கூறப்படுகிறது. உடனடி சிகிச்சை கிடைக்காமல் காலதாமதம் ஏற்பட்டதால் சிறுவன் உயிரிழந்ததாக குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கண்ணனூர்
ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி பணம் எடுத்துச் சென்றால் பறிமுதல் – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
ராமநாதபுரம்: தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி ரூ.50,000-க்கு மேல் ரொக்கம் எடுத்துச் செல்லப்பட்டால் அது பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை முன்னிட்டு 15.03.2026 முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதாக அவர் தெரிவித்தார். மாவட்டத்தில் உள்ள 1,514 வாக்குச்சாவடிகளில் தேர்தல்
பள்ளியில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி.
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் பெருங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள அல் கலம் சர்வதேச பள்ளியில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. மாணவ மாணவிகளுக்கு தரமான கல்வி வழங்கி வரும் இந்த பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி, பள்ளி நிறுவனர் ஷேக் அப்துல் காதர் குத்தூஸ் அஸ் காரி அவர்களின் வழிகாட்டுதலின்படி நடத்தப்பட்டது. பள்ளி தாளாளர் அப்துல் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். பள்ளி முதல்வர்
பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் தலைமையிலும், தமுமுக மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர்
கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டம்.
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமிதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினம் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜசேகர் தலைமையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் ஏர்வாடி எஸ்.ஏ.பி.எம்.எச் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத் தலைமை ஆசிரியை முகமது சாரா சமீமத் ஆலியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மகளிரின் முன்னேற்றம் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்கு குறித்து சிறப்புரை ஆற்றினார். மேலும் முகமது சதக்
தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் தலைவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையிலும், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பாபு லத்தீப் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாதி வெறி ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் பரவலை
தொப்பை கணேசன் என்கவுண்டரில் சுட்டுக் கொலை
சென்னை, மார்ச் 16: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே போலீசார் நடத்திய என்கவுண்டரில் பல்வேறு கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்த தொப்பை கணேசன் என்ற குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த ஜனவரி 30ஆம் தேதி, மாதவரம் ரவுண்டானா அருகே நடந்த வழிப்பறி சம்பவத்தில் ரூ.25 லட்சம் ரொக்கம் மற்றும் 15 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர
எஸ்.பி.கைது பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு
கோவை, மார்ச் 15– கோவைப்புதூர் 4–வது பட்டாலியனில் பணியாற்றி வந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் எஸ்.பி. செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார். கோவைப்புதூர் 4–வது காவல் பட்டாலியனில் பணிபுரியும் பெண் காவலர் ஒருவருக்கு, அதே பட்டாலியனில் பணியாற்றி வந்த எஸ்.பி. செந்தில்குமார் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவலர், சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

