நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த கைதி சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிறை வார்டன் உட்பட மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைகள், கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் இருந்ததோடு, வலது கையில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உடற்கூறாய்வு அறிக்கையைத் தொடர்ந்து, சபரிவர்மன் மரணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சிறை வார்டன் உட்பட மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

