சென்னை, ஜூலை 6:
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட 38-வது வார்டு பகுதிகளான வினோபா நகர், ராஜசேகர் நகர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் ஈ தொல்லை அதிகரித்து பொதுமக்கள் அவதியடைந்து வந்தனர்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறையின் மலேரியா பிரிவு ஊழியர்கள் அப்பகுதிகளில் தீவிர சுகாதாரப் பணியில் ஈடுபட்டு, ஈக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஈ மருந்து தெளிக்கும் பணியை மேற்கொண்டனர்.
இந்த நடவடிக்கையால் ஈ தொல்லை குறைந்து, நோய் பரவலைத் தடுக்கவும் பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், பொதுமக்களும் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாக பராமரித்து, குப்பைகளை தேங்கவிடாமல் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

