“எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோவில் வருகிறோம் என்று கூறியவுடன், அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கார் வழங்க முடிகிறது. ஆனால், நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் மட்டும் என்ன பிரச்னை?” இது வெறும் ரூ.25,000 சம்பளம் குறித்த கேள்வி அல்ல… உழைப்புக்கு வழங்கப்படும் மரியாதை குறித்த கேள்வி. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் முன்னுரிமைகள் யாருக்காக? அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிகளுக்கா? அல்லது அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்
Category: அரசியல்
அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்படுமா?
சென்னை: அரசு அலுவலகங்களில் சீருடை அணியாமல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பணிநேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயமாக அணிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அங்கு பணியாற்றுபவர்களில் யார் அதிகாரி, யார் ஊழியர், யார் பயனாளர் என்பதை எளிதில் கண்டறிய முடியாத சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள்
ஆயுள் கைதிகள் முன்விடுதலை: விரைந்து பரிசீலிக்க கோரிக்கை.
சென்னை:தமிழ்நாட்டில் நன்னடத்தை, குறிப்பிட்ட கால சிறைவாசம், வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட தகுதிகளை நிறைவு செய்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மனுக்களை புதிய அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிறை நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தும் பல மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், கைதிகளின் குடும்பத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, “அனைவருக்குமான ஆட்சி” என்ற நோக்கத்துடன்
அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுகிறது, உயர்நீதிமன்றம் கருத்து.
சென்னை: அரசு வழக்கறிஞர்கள் நியமனம் நியாயமாக நடைபெறுவதாகவே தெரிகிறது என்று உயர்நீதிமன்ற நீதிபதி முகமது சபீக் கருத்து தெரிவித்துள்ளார். அரசு வழக்கறிஞர் தற்காலிக நியமனங்களில் திமுக மற்றும் அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் பரிசீலிக்கப்படுவதாக மனுதாரரே தெரிவித்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. அரசு வழக்கறிஞர் நியமனத்திற்காக தவெக நிர்வாகிகள் ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த முதலமைச்சர் விஜய்
அமைச்சர் குறித்து அவதூறு வழக்கு – யூடியூபர் மாரிதாஸுக்கு நிபந்தனை ஜாமீன்.
அமைச்சர் கீர்த்தனா குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளை வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாஸ்க்கு சென்னை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக சென்னை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப்பதிவு செய்த நிலையில், மதுரையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்ட மாரிதாஸ் பின்னர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ரூ.10,000
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.
பா.ஜ.க.,வில் இருந்து விலகும் K. Annamalai-ன் முடிவை தேசிய தலைமை ஏற்றுக் கொண்டுள்ளது. பா.ஜ.க., Bharatiya Janata Party அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்திருந்த நிலையில், அவரது ராஜினாமா முடிவுக்கு தேசிய தலைமை அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அண்ணாமலை விலகுவது உறுதியாகியுள்ளது.
கலைஞர் 103-வது பிறந்தநாள் விழா: ஆயிரம் பேருக்கு பிரியாணி விருந்து.
திருவொற்றியூர்: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவொற்றியூரில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருவொற்றியூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி. சங்கர் மற்றும் முன்னாள் மாநகராட்சி 5-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கே.பி. சொக்கலிங்கம் ஆகியோர், தி.மு.க. நிர்வாகிகளுடன் இணைந்து கே.வி.கே. குப்பம், விம்கோ நகர் மற்றும் சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கலைஞரின் திருஉருவப் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை
ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம், மார்ச் 26 விடியா திமுக அரசை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட அஇஅதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் இணைந்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ராமநாதபுரம் வருவாய் மாவட்ட தலைநகரான பாரதி நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அஇஅதிமுக மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமை தாங்கினார். ராமநாதபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ஜி.
பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்.
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நிலோபர் கான் தலைமையிலும், தமுமுக மாவட்ட செயலாளர் ஆசிக் சுல்தான் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய கவுன்சிலர்
தமிழக வெற்றி கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம், மார்ச் 16– ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் திமுக அரசை கண்டித்து கலெக்டர் அலுவலகம் தலைவாசல் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் மலர்விழி ஜெயபாலா தலைமையிலும், மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் பாபு லத்தீப் முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சாதி வெறி ஆய்வுக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், மாநிலத்தில் சட்டம்–ஒழுங்கு சீர்கேடு மற்றும் போதைப் பொருட்கள் பரவலை

