அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் இளம் செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீரர் ஃபேபியானோ கருவானாவிடம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த பிரக்ஞானந்தா, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி கம்பேக் கொடுத்தார். இறுதியில் 15–13 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்று
Category: சமீபத்திய செய்திகள்
வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்! தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் கிளை சங்கமான வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில், வி நியூஸ் தமிழ் இன்டர்நேஷனல் வெப்சைட் நியூஸ் சேனலின் செய்தியாளர் ம.அந்தோணி பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று சால்வை அணிவித்து, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ.வினோபாஜி கலந்து கொண்டு, செய்தியாளர் ம.அந்தோணி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது
காவல் நிலையத்தில் நடப்பதை பொதுமக்கள் பதிவு செய்யலாமா? காவல்துறையின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் — நீதிமன்றங்கள் வலியுறுத்தல்!
காவல் நிலையம் என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட இடம் அல்ல. காவல்துறை அதிகாரம் செலுத்தும் இடமாக இருந்தாலும், அங்கு நடைபெறும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்கும் உட்பட்டவையே. காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, விசாரணைக்கு அழைக்கப்படும்போது அல்லது காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்ளும்போது அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல், கட்டாயப்படுத்தல் அல்லது மனித உரிமை மீறல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையாக
காலிஃபிளவர் தடை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் கேள்வி!
ஒரு சில ஓட்டல்களில் புகார் வந்ததற்காக ஒட்டுமொத்த ஓட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்குத் தடை விதிப்பதா? திருமலை திருப்பதியில் உள்ள ஓட்டல்களில் காலிஃபிளவர் உணவு வகைகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சில ஓட்டல்களில் காலிஃபிளவரில் புழுக்கள் இருந்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கோபி ரைஸ், காலிஃபிளவர் பக்கோடா, மஞ்சூரியன் உள்ளிட்ட காலிஃபிளவர் உணவு வகைகளை ஓட்டல்களில் தயாரித்து விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை
கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம்!
திருச்சி: போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கேரளாவில் இருந்து நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் மேற்கொண்டு வரும் கேரளாவைச் சேர்ந்த சனீத், திருச்சி வந்தடைந்தார். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனீத், சைக்கிளின் முன்பக்க சக்கரத்தை அகற்றி, பின்பக்க ஒரே சக்கரத்தின் உதவியுடன் தனது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இந்த சவாலான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ‘Say No to
164-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
சென்னை ராயபுரம் பகுதியில், ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சாய் சைலேஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிறந்தநாளை வெறும் கொண்டாட்டமாக மட்டும் கொண்டாடாமல், இந்த நாளில் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், சாய் சைலேஷ் அவர்கள் அறக்கட்டளையை அணுகினார். அதன்படி, முன்கூட்டியே
ஆர்.கே.நகரில் மீண்டும் வெள்ள அபாயம்! ஆகாயத்தாமரை, குப்பைகளால் அடைபட்ட கூவம் ஆறு — போர்க்கால நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட ராஜசேகரன் நகர், பட்டேல் நகர், அன்னை சந்தியா நகர், புதிய வினோபா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு அச்சத்தில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக, அப்பகுதியில் பாயும் கூவம் ஆறு ஆகாயத்தாமரையாலும், குப்பைகளாலும் முழுமையாக அடைபட்டிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆற்றையே காண முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரை! கிடைக்கப்பெற்ற புகைப்படங்களில், கூவம் ஆற்றின் நீர்ப்பரப்பு
டாஸ்மாக் கடைகளில் காவலர்களை பணியமர்த்த உத்தரவு
சென்னை, ஆக. 8– நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்று உள்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் நுகர்வோர் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் புகார்களின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கண்டன அறிக்கை ஹரி பிரபு மனோகர பூபதி.
“எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.” எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் விஜய் தவறாக பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பேச்சு சுதந்திரத்தை அடக்கும் வகையிலும், கருத்து தெரிவிக்கும் உரிமையை அச்சுறுத்தும் வகையிலும், எந்த நபரும் செயல்படத் தயங்கும் சூழலை உருவாக்கும் வகையிலும் ஆட்சி செயல்படக் கூடாது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு
பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளின் வரலாற்று முக்கியத்துவம் குறித்து கண்காட்சி
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில், பிரிட்டிஷ் இந்திய அஞ்சல் முத்திரைகளில் காணப்படும் குறியீட்டு எழுத்துகள் மற்றும் இடைநிலை அஞ்சல் முத்திரைகளின் முக்கியத்துவம் குறித்த அஞ்சல் உறை மற்றும் முத்திரை கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தொடக்க உரையாற்றினார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் பிரேம்குமார், ஜலால், இளம்வழுதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிறுவனர் நாசர்,

