திமுக நிர்வாகி மீது கொலை முயற்சி: 3 பேர் கைது

திமுக நிர்வாகி மீது கொலை முயற்சி: 3 பேர் கைது

சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி ராஜா (45) மீது வீட்டு வாசலிலேயே அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜா உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (44), ரஞ்சித் (33), அபினேஷ் (18) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் தாக்குதலுக்கான காரணம், முன்விரோதம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook