சென்னை: ராஜஸ்தான் காஸ்மோ கிளப் அறக்கட்டளை சார்பில், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பவானர் பள்ளியில் (LKG முதல் 5-ம் வகுப்பு வரை) பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தலா 2 செட் புதிய பள்ளி சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அறக்கட்டளையின் தலைவர் கம்பீர்ஜி சோர்டியா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நிர்வாக அறங்காவலர் மனீஷ் குமார் சவுத்ரி, செயலாளர் சுரேந்திர கோத்தாரி, NSU தலைவர் தர்ஷன் கோத்தாரி மற்றும் உறுப்பினர்கள்
Author: vnewstamil
வீடு புகுந்து இளைஞர் வெட்டிக் கொலை: 8 பேர் கைது.
சென்னை நொளம்பூர் பகுதியில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையாக மாறியது. 8 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சஞ்சய் (25) என்ற இளைஞரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த தாக்குதலில் சஞ்சயின் தந்தை முருகதாஸ் மற்றும் சகோதரர் சரத் ஆகியோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கொலை வழக்கில் தப்பியோட முயன்றதாகக் கூறப்படும் ரூபேஷை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். மேலும்,
போதைக்கு பணம் தர மருத்த, தாய்மாமனை அடித்துக் கொலை.
சென்னை வியாசர்பாடி ஏரிக்கரை ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் மது அருந்த பணம் கேட்டு ஏற்பட்ட தகராறில் தாய் மாமனை தாக்கி கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், அப்பகுதியில் வசித்து வந்த முருகன் (50) என்பவரிடம் அவரது உறவினரான பவித்ரன் (30) மது குடிக்க பணம் கேட்டதாக கூறப்படுகிறது. பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த
ரூ.2 கோடி காப்பீட்டு பணத்திற்காக கணவருக்கு விஷ ஊசி: மனைவி, கள்ளக்காதலன் கைது.
திருப்பதி, ஜூன் 16: தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சந்தீப் (46) தனது பெயரில் ரூ.2 கோடி காப்பீடு எடுத்திருந்தார். கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், காப்பீட்டு தொகையை கைப்பற்றும் நோக்கில் அவரது மனைவி சுமா மற்றும் அவரது கள்ளக்காதலன் புண்டலிகா டோம் பர் ஆகியோர் இணைந்து திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,
பட்டா கத்தியுடன் இளைஞர் மிரட்டல்!
சென்னை பெரம்பூர் பகுதியில் ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் மோதியதை தட்டிக் கேட்ட முதியவரை பட்டா கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் குறித்து முதியவர் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த இளைஞர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அச்சமடைந்த முதியவர் உடனடியாக வீட்டிற்குள் சென்றார். ஆனால் அதன்பிறகும் இளைஞர் அங்கிருந்து செல்லாமல், தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.
போலீஸ் ஏட்டு மீது நடவடிக்கை. ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறல்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பணியாற்றி வந்த போலீஸ் ஏட்டு முருகன் (45) கள் அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். போலீஸ் துறையின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறும் வகையில் நடந்துகொண்டதாகக் கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருவதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாச பேச்சு: தலைமை காவலர் பணியிடை நீக்கம்!
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த தலைமை காவலர் அக்னிமுத்து, குடும்பப் பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி, குறுஞ்செய்திகள் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மனுவில் இருந்த செல்போன் எண்ணை பயன்படுத்தி அந்த பெண்ணை தொடர்புகொண்டு தொடர்ந்து தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து, காவல்துறை உயரதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின்
ரூ.11.82 கோடி உயர்ரக கஞ்சா கடத்தல்: கேரள மாடல் அழகி கைது!
தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.11.82 கோடி மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்ததாக கேரளத்தைச் சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா சன்னி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது டிராலி பேக்கை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, பேக்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்
குற்றவாளிகளுடன் தொடர்பு: 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்.
தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய எழுத்தர் கோபி மற்றும் தனிப்படை காவலர் மகேஷ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததுடன், அவர்களிடம் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக செயல்படும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் துணை ஆணையர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சம்மதத்துடன் கூடிய உறவு தவறல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
திருமணம் ஆகாத வயது வந்த ஆண், பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வைத்திருக்கும் உறவை தவறான நடத்தையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. எல்லாக் காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை என்பதையும், அதற்காக ஒருவரை ஏமாற்றியதாக தானாகவே கருத முடியாது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞருக்கு மீண்டும்

