கேரம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவருக்குப் பாராட்டு!

கேரம் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவருக்குப் பாராட்டு!

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை:

 

திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான தமிழக முதலமைச்சர் மாநிலக் கோப்பைக்கான கேரம் போட்டியில், ஒற்றையர் பிரிவில் இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்ற கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது.

 

கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு வானூர்திப் பொறியியல் துறையில் பயின்று வரும் மாணவர் பிரஜன், இப்போட்டியில் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதன் மூலம் வெள்ளிப் பதக்கத்துடன் ரூ.75,000 ரொக்கப் பரிசையும் பெற்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார்.

 

சாதனை படைத்த மாணவர் பிரஜனை, முகமது சதக் அறக்கட்டளைத் தலைவர் எஸ்.எம். யூசுப் சாகிப், அறக்கட்டளைச் செயலாளர் சர்மிளா, அறக்கட்டளை இயக்குநர் எஸ்.எம்.ஏ. ஜெஹப் முஹம்மது சதக்கத்துல்லா, கல்லூரி முதல்வர் முனைவர் நிர்மல் கண்ணன், துணை முதல்வர் முனைவர் செந்தில்குமார், கல்விப் புல முதன்மையர் முனைவர் திராவிட செல்வி, அனைத்துத் துறைத் தலைவர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குநர் முனைவர் சுரேஷ்குமார் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

 

மாநில அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று கல்லூரிக்குப் பெருமை சேர்த்த மாணவர் பிரஜனுக்குப் பேராசிரியர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

 

ராமநாதபுரம் மாவட்டச் செய்தியாளர்: M.N. அன்வர் அலி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook