முதல் இந்தியர்! பிரக்ஞானந்தா வரலாற்று சாதனை!

அமெரிக்காவில் நடைபெற்ற Grand Chess Tour சாம்பியன் பட்டத்தை வென்று இந்தியாவின் இளம் செஸ் வீரர் ஆர். பிரக்ஞானந்தா வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். இப்பட்டத்தை வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் முன்னணி வீரர் ஃபேபியானோ கருவானாவிடம் தொடக்கத்தில் பின்னடைவை சந்தித்த பிரக்ஞானந்தா, பின்னர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி கம்பேக் கொடுத்தார். இறுதியில் 15–13 புள்ளிகள் என்ற கணக்கில் வெற்றி பெற்று

Read More

வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில் பிறந்தநாள் வாழ்த்து

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!   தமிழ்நாடு வணிகர் சங்கத்தின் கிளை சங்கமான வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கம் சார்பில், வி நியூஸ் தமிழ் இன்டர்நேஷனல் வெப்சைட் நியூஸ் சேனலின் செய்தியாளர்  ம.அந்தோணி பிறந்தநாளை முன்னிட்டு நேரில் சென்று சால்வை அணிவித்து, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில், வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ.வினோபாஜி கலந்து கொண்டு, செய்தியாளர் ம.அந்தோணி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவரது

Read More

1930 — இணையவழி நிதி மோசடிக்கு உடனடி உதவி எண்! பணம் மோசடி செய்யப்பட்டால் உடனடியாக 1930-க்கு அழைக்கலாம் — தாமதிக்காமல் புகார் அளித்தால் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள முடியும்!

இந்தியாவில் இணையவழி நிதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களைப் புகாரளிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) சார்பில் 1930 என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண் செயல்பட்டு வருகிறது. இந்த உதவி எண் மூலம் குறிப்பாக UPI மோசடி, இணையவழி வங்கி மோசடி, கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி, நெட் பேங்கிங் மோசடி உள்ளிட்ட நிதி சார்ந்த சைபர் குற்றங்களை உடனடியாகப்

Read More

கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம்!

திருச்சி: போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கேரளாவில் இருந்து நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் மேற்கொண்டு வரும் கேரளாவைச் சேர்ந்த சனீத், திருச்சி வந்தடைந்தார். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனீத், சைக்கிளின் முன்பக்க சக்கரத்தை அகற்றி, பின்பக்க ஒரே சக்கரத்தின் உதவியுடன் தனது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இந்த சவாலான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ‘Say No to

Read More

மக்கள் பாதுகாப்பை விட அரசியல் நிகழ்ச்சிகளா? — ஆர்.கே. நகரில் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்கள் சரமாரி கேள்வி!

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளும், மூடி இல்லாமல் காணப்படும் மழைநீர் வடிகால்வாய்களும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மழைக்காலங்களில் சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் இதுபோன்ற ஆபத்தான நிலை நீடிப்பது ஏன் அதிகாரிகளின் கவனத்திற்கு வரவில்லை? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருபுறம் “தெருவுக்கு நான்கு கட்சிகள்” என்ற அளவுக்கு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்

Read More

164-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.

சென்னை ராயபுரம் பகுதியில், ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சாய் சைலேஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிறந்தநாளை வெறும் கொண்டாட்டமாக மட்டும் கொண்டாடாமல், இந்த நாளில் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், சாய் சைலேஷ் அவர்கள் அறக்கட்டளையை அணுகினார். அதன்படி, முன்கூட்டியே

Read More

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருவொற்றியூர் தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட சாத்தாங்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.   நிகழ்ச்சியில் சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் அமீர் அலி கான், மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல், மன ரீதியான பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.   மேலும், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து தங்களது பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை குடும்பத்திலும் ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு

Read More

லஞ்சம் கேட்டால்… உடனே புகார் தெரிவிக்கலாம்!

சென்னை பெருநகர காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில், ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவலர்கள் அல்லது காவல் துறை ஊழியர்கள் தங்களது பணிகளைச் செய்வதற்காக லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 7871723000 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். லஞ்சம் கேட்பதை கண்டால் மௌனம் வேண்டாம்… புகார் தெரிவிப்போம்!

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்! ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்.

திருவொற்றியூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ். சௌமியா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் எஸ். ரங்கநாதன், அவந்திகா மற்றும் பள்ளி முதல்வர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரத்ததானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தும்

Read More

சிட்கோ நிலம் முறைகேடு வழக்கு மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை: கிண்டியில் உள்ள சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Read More

Facebook