குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் மருத்துவர் வே.க.ராஜீவ்!

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் மருத்துவர் வே.க.ராஜீவ்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பட்டணம்காத்தான் ஊராட்சியில் ஓஎன்ஜிசி காவிரி அசெட் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான மருத்துவர் வே.க. ராஜீவ் திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட சேதுபதி நகர் இரண்டாவது தெருவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் மருத்துவர் வே.க. ராஜீவ் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஓஎன்ஜிசி அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள 40 ஒளிரும் எச்சரிக்கை விளக்குகளின் (பிளிங்கர்ஸ்) தொடக்க விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் மருத்துவர் வே.க. ராஜீவ் கலந்துகொண்டு விளக்குகளின் செயல்பாட்டைத் தொடங்கி வைத்தார்.

 

தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த விளக்குகள், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

 

செய்தியாளர்: M.N. அன்வர் அலி

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook