காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும்! ஏழை, எளிய மக்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை.

காவல் நிலையங்களுக்கு தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது. கடந்த காலங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் சில காவலர்கள் ஏளனமாக பேசுவதும், ஒருமையில் அழைப்பதும், அவர்களின் குறைகளை அலட்சியமாக அணுகுவதும் இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் இந்த நிலை ஓரளவு மாறி வந்தாலும், இன்னும்

Read More

கஞ்சா போதையை தட்டி கேட்ட மாணவன் மரணம். மூன்று பேர் கைது.

சென்னை திருவொற்றியூரில் கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்தை தட்டிக் கேட்ட மாணவர் தனுஷ் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்த மாணவர் தனுஷை, பள்ளி அருகே உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தனுஷின் கழுத்தில் கால் வைத்து மிதித்ததாகவும், இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக

Read More

ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – இருவர் கைது

சென்னை திருவொற்றியூர் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், எண்ணூர் உதவி ஆணையாளர் வெங்கட் ரமணன் உத்தரவின்பேரில், M8 சாத்தாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது அலி ஜின்னா மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் உதவி ஆய்வாளர்கள் வேலாயா பாண்டியன், பாலாஜி மற்றும் எண்ணூர் உதவி ஆணையாளர் அவர்களின் தனிப்படையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள்

Read More

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்படுமா?

சென்னை: அரசு அலுவலகங்களில் சீருடை அணியாமல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பணிநேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயமாக அணிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அங்கு பணியாற்றுபவர்களில் யார் அதிகாரி, யார் ஊழியர், யார் பயனாளர் என்பதை எளிதில் கண்டறிய முடியாத சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள்

Read More

ஆர்.கே.நகரில் மீண்டும் வெள்ள அபாயம்! ஆகாயத்தாமரை, குப்பைகளால் அடைபட்ட கூவம் ஆறு — போர்க்கால நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட ராஜசேகரன் நகர், பட்டேல் நகர், அன்னை சந்தியா நகர், புதிய வினோபா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு அச்சத்தில் உள்ளனர்.   இதற்கு முக்கிய காரணமாக, அப்பகுதியில் பாயும் கூவம் ஆறு ஆகாயத்தாமரையாலும், குப்பைகளாலும் முழுமையாக அடைபட்டிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது.   ஆற்றையே காண முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரை!   கிடைக்கப்பெற்ற புகைப்படங்களில், கூவம் ஆற்றின் நீர்ப்பரப்பு

Read More

ராஜரத்தினம் நகரில் ஆபத்தான நிலையில் மின்சார பெட்டிகள்! உயிரிழப்பு ஏற்படும் முன் மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?

சென்னை: கொடுங்கையூர் தொகுதிக்குட்பட்ட ராஜரத்தினம் நகர் பகுதியில் மின்சார பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.   பல இடங்களில் மின்சார பெட்டிகள் அலங்கோலமாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மின்சார பெட்டிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கினால் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் நேரிடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.   இந்தப் பகுதியில் தினசரி ஏராளமான

Read More

லஞ்சம் கேட்டால்… உடனே புகார் தெரிவிக்கலாம்!

சென்னை பெருநகர காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில், ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவலர்கள் அல்லது காவல் துறை ஊழியர்கள் தங்களது பணிகளைச் செய்வதற்காக லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 7871723000 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். லஞ்சம் கேட்பதை கண்டால் மௌனம் வேண்டாம்… புகார் தெரிவிப்போம்!

Read More

மழைக்காலம் தொடங்கும் முன் நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின் பெட்டிகள் மற்றும் மின் இணைப்பு வயர்கள் முறையான பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின் பெட்டிகள் வெளிப்புறத்தில் சேதமடைந்த நிலையிலும், அதனைச் சுற்றியுள்ள மின் வயர்கள் ஒழுங்கற்ற முறையில் தொங்கியபடியும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் மின் கசிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால்

Read More

பணியின் போது மொபைலில் பேசும் போக்குவரத்து காவலர்கள்! உயர்நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி

சென்னை: பணியின் போது போக்குவரத்து காவலர்கள் மொபைல் போனில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இதுதொடர்பாக பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதில் கவனம் செலுத்தி வருவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை காவல்துறை தீவிரமாகக் கருதி உரிய நடவடிக்கை

Read More

காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு சம்மன்! செப். 10-ல் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை:   காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.   ரூ.2 கோடி கடன் பெற்றதற்காக சரத்குமார் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியதாகக் கூறி ஸ்ரீகிருஷ்ணா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சரத்குமார் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில்

Read More

Facebook