சென்னை: கிண்டியில் உள்ள சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
Category: குற்றம்
ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. கைது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதுங்கிருந்து பிடித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றி வரும் சரவணப்பெருமாள், ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். பரமக்குடி பகுதியில் மணல் குவாரி நடத்தி வரும் ஒருவரிடம், சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அதன்படி, சம்பந்தப்பட்ட
அனைவரும் விசாரணை வளையத்தில்!
சென்னை, ஆக. 6– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வாளர் புகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்றொரு ஆய்வாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உதவி ஆணையர் முதல் காவலர் வரை 100-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் மீது வேறு ஏதேனும் முறைகேடு அல்லது புகார்கள் உள்ளனவா
கண்டன அறிக்கை ஹரி பிரபு மனோகர பூபதி.
“எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.” எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் விஜய் தவறாக பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பேச்சு சுதந்திரத்தை அடக்கும் வகையிலும், கருத்து தெரிவிக்கும் உரிமையை அச்சுறுத்தும் வகையிலும், எந்த நபரும் செயல்படத் தயங்கும் சூழலை உருவாக்கும் வகையிலும் ஆட்சி செயல்படக் கூடாது. ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு
₹40 லட்சம் வசூல் வழக்கு: இன்ஸ்பெக்டர் புகாரி உள்பட 2 பேர் கைது.
சென்னை, ஆக. 4: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதாக மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) முகமது புகாரி மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில்குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகாரில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதாக
ஆக்கிரமிப்பால் குளம் தூர்வாரும் பணி நிறுத்தம் நடவடிக்கை எடுக்கக் கோரி அதிகாரியிடம் ஊர் மக்கள் மனு.
சென்னை, மணலி: பெருநகர சென்னை மாநகராட்சி 2-வது மண்டலத்திற்குட்பட்ட மணலி எலந்தனூர் பகுதியில் உள்ள பொதுக் குளத்தை மாநகராட்சி சார்பில் தூர்வாரி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், தனிநபர் ஆக்கிரமிப்பு காரணமாக அந்தப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மணலி எலந்தனூர் கிராம சேவா சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து சம்பந்தப்பட்ட உதவி பொறியாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், குளத்தைச் சுற்றி தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு
கடலில் ராட்சத அலை: இளம் பெண் பலி – மாணவர் மாயம்.
சென்னை எண்ணூர் கடற்கரையில் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி 18 வயதான கிருத்திகா என்ற இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆகாஷ் (20) என்ற கல்லூரி மாணவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு மாயமானார். தனியார் கல்லூரியைச் சேர்ந்த 5 மாணவர்கள் பொழுதுபோக்கிற்காக எண்ணூர் கடற்கரைக்கு வந்திருந்தனர். அப்போது அவர்கள் கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட ராட்சத அலை காரணமாக கிருத்திகா மற்றும் ஆகாஷ் இருவரும்
காமராஜர் குறித்து அவதூறு பேச்சு: டிஜிபி அலுவலகத்தில் புகார்.
சென்னை, ஜூலை 22: பெருந்தலைவர் காமராஜர் குறித்து தரக்குறைவாக பேசியதாக குற்றம் சாட்டப்படும் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த எம்.எஸ். அருணாசலம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு நாடார் சங்கங்கள் சார்பில் இன்று (22.07.2026) சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்படுகிறது. இந்த புகார் மனுவை மின்னல் ஸ்டீபன் நாடார், முத்துரமேஷ் நாடார், சாமுவேல் திரவியம் நாடார், விஜயசந்திரன் நாடார் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல நாடார்
ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல். 4 பேர் கொண்ட கும்பல் கைது.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் என்பவரை காரில் கடத்தி, ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். பாரிமுனையில் பாத்திரக் கடை நடத்தி வரும் கமலேஷ், நேற்று காலை நேரு பூங்கா பகுதியில் கடத்தப்பட்டார். பின்னர் ரூ.50 லட்சம் கேட்ட கும்பல், இறுதியில் ரூ.30 லட்சம் தர வேண்டும் என கூறி, 5 சவரன் நகையையும் பறித்துக் கொண்டு பணத்தை எடுத்து
சிறப்பு காவல்படை கமாண்டன்ட் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு.
கோவை, தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் சஸ்பெண்ட் கமாண்டன்ட் செந்தில்குமார், தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.28 கோடி மதிப்பிலான சொத்துகளை சேர்த்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ரெட்டையார்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், 1997-ஆம் ஆண்டு எஸ்.ஐ.யாக காவல்துறையில் பணியில் சேர்ந்தார். பின்னர் பதவி உயர்வு பெற்று, கோவைப்புதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படையின் 4-வது பட்டாலியன் கமாண்டன்டாக 2022 முதல் பணியாற்றி வந்தார். கடந்த

