சென்னை:தமிழ்நாட்டில் நன்னடத்தை, குறிப்பிட்ட கால சிறைவாசம், வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட தகுதிகளை நிறைவு செய்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மனுக்களை புதிய அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிறை நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தும் பல மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், கைதிகளின் குடும்பத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, “அனைவருக்குமான ஆட்சி” என்ற நோக்கத்துடன் செயல்படும் தமிழக அரசு, மனிதநேயம் மற்றும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு, கைதிகளின் மறுவாழ்வை கருத்தில் கொண்டு, இந்த மனுக்கள் மீது எவ்வித காலதாமதமுமின்றி வெளிப்படையான முறையில் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், குடும்பத்தினரும் வலியுறுத்தியுள்ளனர்.

