சென்னை: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி மாநிலச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள எம். எம். கோபி அவர்களுக்கு, வடசென்னை பொது வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு, மேலும் பல உயரங்களை அடைய வேண்டும் என சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன. இதையொட்டி, வடசென்னை பொது வியாபாரிகள் நலச் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அ. வினோபாஜி,
Author: vnewstamil
1930 — இணையவழி நிதி மோசடிக்கு உடனடி உதவி எண்! பணம் மோசடி செய்யப்பட்டால் உடனடியாக 1930-க்கு அழைக்கலாம் — தாமதிக்காமல் புகார் அளித்தால் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கையை விரைவாக மேற்கொள்ள முடியும்!
இந்தியாவில் இணையவழி நிதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களைப் புகாரளிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) சார்பில் 1930 என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண் செயல்பட்டு வருகிறது. இந்த உதவி எண் மூலம் குறிப்பாக UPI மோசடி, இணையவழி வங்கி மோசடி, கிரெடிட்/டெபிட் கார்டு மோசடி, நெட் பேங்கிங் மோசடி உள்ளிட்ட நிதி சார்ந்த சைபர் குற்றங்களை உடனடியாகப்
காவல் நிலையத்தில் நடப்பதை பொதுமக்கள் பதிவு செய்யலாமா? காவல்துறையின் நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் — நீதிமன்றங்கள் வலியுறுத்தல்!
காவல் நிலையம் என்பது சட்டத்திற்கு அப்பாற்பட்ட இடம் அல்ல. காவல்துறை அதிகாரம் செலுத்தும் இடமாக இருந்தாலும், அங்கு நடைபெறும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் மனித உரிமைகளுக்கும் உட்பட்டவையே. காவல் நிலையங்களில் பொதுமக்கள் புகார் அளிக்கும்போது, விசாரணைக்கு அழைக்கப்படும்போது அல்லது காவல்துறை நடவடிக்கையை எதிர்கொள்ளும்போது அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல், கட்டாயப்படுத்தல் அல்லது மனித உரிமை மீறல் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதே நீதிமன்றங்களின் தொடர்ச்சியான அணுகுமுறையாக
“ஏன் முடியாது?” — உழைக்கும் மக்களின் உரிமைக்கான கேள்வி. “எம்.எல்.ஏ. உதவியாளருக்கு ரூ.25,000 சம்பளம் வழங்க வேண்டும் என்று நினைக்கும் முதலமைச்சரால், தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 ஊதியம் வழங்க ஏன் முடியாது?”
“எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோவில் வருகிறோம் என்று கூறியவுடன், அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கார் வழங்க முடிகிறது. ஆனால், நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் மட்டும் என்ன பிரச்னை?” இது வெறும் ரூ.25,000 சம்பளம் குறித்த கேள்வி அல்ல… உழைப்புக்கு வழங்கப்படும் மரியாதை குறித்த கேள்வி. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் முன்னுரிமைகள் யாருக்காக? அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிகளுக்கா? அல்லது அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்
காலிஃபிளவர் தடை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் உத்தரவுக்கு பொதுமக்கள் கடும் கேள்வி!
ஒரு சில ஓட்டல்களில் புகார் வந்ததற்காக ஒட்டுமொத்த ஓட்டல்களிலும் காலிஃபிளவர் உணவுகளுக்குத் தடை விதிப்பதா? திருமலை திருப்பதியில் உள்ள ஓட்டல்களில் காலிஃபிளவர் உணவு வகைகளுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ள விவகாரம் தற்போது பொதுமக்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. சில ஓட்டல்களில் காலிஃபிளவரில் புழுக்கள் இருந்ததாகத் தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, கோபி ரைஸ், காலிஃபிளவர் பக்கோடா, மஞ்சூரியன் உள்ளிட்ட காலிஃபிளவர் உணவு வகைகளை ஓட்டல்களில் தயாரித்து விற்பனை செய்ய தற்காலிகமாகத் தடை
புழல் மத்திய சிறையில் சிறைவாசிகளின் அருகே கோழிப்பண்ணை! துர்நாற்றம்… சுகாதார அச்சம்… தொற்று நோய் அபாயம்? — உடனடியாக அகற்ற சிறைவாசிகள் கோரிக்கை! சிறைவாசிகளின் சுகாதார உரிமையை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை புழல் பகுதியில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலை வளாகத்தில், தண்டனை சிறைச்சாலைக்குள் சிறைவாசிகள் தங்கும் பகுதிகளுக்கு அருகாமையில் கோழி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களுக்கு கடும் துர்நாற்றம் ஏற்படுவதுடன், சுகாதார பாதிப்புகள் மற்றும் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சிறைவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர். புழல் சிறை வளாகத்தில் மத்திய சிறை–I, மத்திய சிறை–II மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலை உள்ளிட்ட பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. சுமார்
கேரளா முதல் நேபாளம் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம்!
திருச்சி: போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கேரளாவில் இருந்து நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் பேஸ் கேம்ப் வரை ஒற்றைச் சக்கர சைக்கிளில் சாதனைப் பயணம் மேற்கொண்டு வரும் கேரளாவைச் சேர்ந்த சனீத், திருச்சி வந்தடைந்தார். கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனீத், சைக்கிளின் முன்பக்க சக்கரத்தை அகற்றி, பின்பக்க ஒரே சக்கரத்தின் உதவியுடன் தனது உடைமைகளையும் எடுத்துக்கொண்டு இந்த சவாலான பயணத்தை மேற்கொண்டு வருகிறார். ‘Say No to
மக்கள் பாதுகாப்பை விட அரசியல் நிகழ்ச்சிகளா? — ஆர்.கே. நகரில் அதிகாரிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொதுமக்கள் சரமாரி கேள்வி!
சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த நிலையில் காணப்படும் மின்சார பெட்டிகளும், மூடி இல்லாமல் காணப்படும் மழைநீர் வடிகால்வாய்களும் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மழைக்காலங்களில் சிறுவர்கள், பெண்கள், வயதானவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் நடமாடும் தெருக்களில் இதுபோன்ற ஆபத்தான நிலை நீடிப்பது ஏன் அதிகாரிகளின் கவனத்திற்கு வரவில்லை? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். ஒருபுறம் “தெருவுக்கு நான்கு கட்சிகள்” என்ற அளவுக்கு அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள்
காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு மரியாதை வழங்கப்பட வேண்டும்! ஏழை, எளிய மக்கள் என்ற பாகுபாடின்றி அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் – பொதுமக்கள் கோரிக்கை.
காவல் நிலையங்களுக்கு தங்களது குறைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் காவல்துறையினர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் வலுத்துள்ளது. கடந்த காலங்களில் காவல் நிலையங்களில் புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் சில காவலர்கள் ஏளனமாக பேசுவதும், ஒருமையில் அழைப்பதும், அவர்களின் குறைகளை அலட்சியமாக அணுகுவதும் இருந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். காலப்போக்கில் இந்த நிலை ஓரளவு மாறி வந்தாலும், இன்னும்
164-வது நாள் உணவு வழங்கும் நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்றது.
சென்னை ராயபுரம் பகுதியில், ஆர்.எஸ்.ஆர்.எம். மகப்பேறு மருத்துவமனை எதிரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. வழக்கறிஞர் சாய் சைலேஷ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. பிறந்தநாளை வெறும் கொண்டாட்டமாக மட்டும் கொண்டாடாமல், இந்த நாளில் ஏதாவது ஒரு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், சாய் சைலேஷ் அவர்கள் அறக்கட்டளையை அணுகினார். அதன்படி, முன்கூட்டியே

