சென்னை திருவொற்றியூரில் கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்தை தட்டிக் கேட்ட மாணவர் தனுஷ் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்த மாணவர் தனுஷை, பள்ளி அருகே உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். மேலும், தனுஷின் கழுத்தில் கால் வைத்து மிதித்ததாகவும், இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக
Author: vnewstamil
ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள், ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் – இருவர் கைது
சென்னை திருவொற்றியூர் பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், எண்ணூர் உதவி ஆணையாளர் வெங்கட் ரமணன் உத்தரவின்பேரில், M8 சாத்தாங்காடு காவல் நிலைய ஆய்வாளர் முகமது அலி ஜின்னா மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இதில் உதவி ஆய்வாளர்கள் வேலாயா பாண்டியன், பாலாஜி மற்றும் எண்ணூர் உதவி ஆணையாளர் அவர்களின் தனிப்படையினர் இணைந்து நடத்திய நடவடிக்கையில், ரூ.2 லட்சம் மதிப்பிலான போதை மாத்திரைகள்
எண்ணூர் – மகாபலிபுரம் இடையே ‘வாட்டர் மெட்ரோ’ திட்டம்!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில், எண்ணூர் முதல் மகாபலிபுரம் வரையிலான பக்கிங்ஹாம் கால்வாயில் ‘வாட்டர் மெட்ரோ’ எனப்படும் நீர்வழிப் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், மாற்று போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக, திட்டத்தின் சாத்தியக்கூறுகள், தொழில்நுட்ப அம்சங்கள், நீர்வழிப் பாதையின் நிலை, பயணிகள் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு
அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்படுமா?
சென்னை: அரசு அலுவலகங்களில் சீருடை அணியாமல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பணிநேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயமாக அணிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அங்கு பணியாற்றுபவர்களில் யார் அதிகாரி, யார் ஊழியர், யார் பயனாளர் என்பதை எளிதில் கண்டறிய முடியாத சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள்
ஆர்.கே.நகரில் மீண்டும் வெள்ள அபாயம்! ஆகாயத்தாமரை, குப்பைகளால் அடைபட்ட கூவம் ஆறு — போர்க்கால நடவடிக்கை எடுக்க அரசுக்கு கோரிக்கை
சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட ராஜசேகரன் நகர், பட்டேல் நகர், அன்னை சந்தியா நகர், புதிய வினோபா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், வரவிருக்கும் மழைக்காலத்தை முன்னிட்டு அச்சத்தில் உள்ளனர். இதற்கு முக்கிய காரணமாக, அப்பகுதியில் பாயும் கூவம் ஆறு ஆகாயத்தாமரையாலும், குப்பைகளாலும் முழுமையாக அடைபட்டிருப்பது சுட்டிக்காட்டப்படுகிறது. ஆற்றையே காண முடியாத அளவுக்கு ஆகாயத்தாமரை! கிடைக்கப்பெற்ற புகைப்படங்களில், கூவம் ஆற்றின் நீர்ப்பரப்பு
மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்டு சென்டர். இலவச கண் பரிசோதனை முகாம்
சென்னை: மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்டு சென்டர் சார்பில், எஸ்.எஸ். ஜெயின் சங்கம் புரசைவாக்கம் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன், பரம பூஜ்ய ஆச்சார்ய சம்ராட் ஸ்ரீ ஆனந்த் ரிஷி ஜி மகாராஜ் சாஹேப் அவர்களின் 126-வது பிறந்த ஜெயந்தியை முன்னிட்டு, எட்டாவது இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சென்னை அடையாறு VHS மருத்துவமனை குழுவினரின் சேவையுடன், 10.08.2026 திங்கட்கிழமை காலை ஸ்ரீ ஆதர்ஷ் ஜ்யோதி ஜி மகாராஜ் சாஹேப்
ராஜரத்தினம் நகரில் ஆபத்தான நிலையில் மின்சார பெட்டிகள்! உயிரிழப்பு ஏற்படும் முன் மின்வாரியம் உடனடி நடவடிக்கை எடுக்குமா?
சென்னை: கொடுங்கையூர் தொகுதிக்குட்பட்ட ராஜரத்தினம் நகர் பகுதியில் மின்சார பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடைந்த நிலையில் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல இடங்களில் மின்சார பெட்டிகள் அலங்கோலமாகவும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் காணப்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக மழைக்காலங்களில் மின்சார பெட்டிகளைச் சுற்றி தண்ணீர் தேங்கினால் மின்கசிவு ஏற்பட்டு விபத்துகள் நேரிடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்தப் பகுதியில் தினசரி ஏராளமான
போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருவொற்றியூர் தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு
திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட சாத்தாங்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் அமீர் அலி கான், மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல், மன ரீதியான பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து தங்களது பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை குடும்பத்திலும் ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு
லஞ்சம் கேட்டால்… உடனே புகார் தெரிவிக்கலாம்!
சென்னை பெருநகர காவல்துறையில் காவலர்கள் மற்றும் ஊழியர்கள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் வகையில், ‘ஊழல் ஒழிப்பு தனிப்பிரிவு’ இன்று புதிதாக தொடங்கப்பட்டுள்ளது. காவலர்கள் அல்லது காவல் துறை ஊழியர்கள் தங்களது பணிகளைச் செய்வதற்காக லஞ்சம் கேட்டால், பொதுமக்கள் 7871723000 என்ற எண்ணில் நேரடியாகவோ அல்லது WhatsApp மூலமாகவோ தகவல் தெரிவிக்கலாம். லஞ்சம் கேட்பதை கண்டால் மௌனம் வேண்டாம்… புகார் தெரிவிப்போம்!
மழைக்காலம் தொடங்கும் முன் நடவடிக்கை எடுக்குமா மின்வாரியம்?
சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் மின் பெட்டிகள் மற்றும் மின் இணைப்பு வயர்கள் முறையான பராமரிப்பின்றி ஆபத்தான நிலையில் காட்சியளிப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். பல இடங்களில் மின் பெட்டிகள் வெளிப்புறத்தில் சேதமடைந்த நிலையிலும், அதனைச் சுற்றியுள்ள மின் வயர்கள் ஒழுங்கற்ற முறையில் தொங்கியபடியும் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, மழைக்காலம் நெருங்கி வரும் நிலையில் மின் கசிவு ஏற்படும் அபாயம் அதிகரிக்கக்கூடும் என்றும், இதனால்

