பணியின் போது மொபைலில் பேசும் போக்குவரத்து காவலர்கள்! உயர்நீதிமன்ற நீதிபதி கடும் அதிருப்தி

சென்னை: பணியின் போது போக்குவரத்து காவலர்கள் மொபைல் போனில் பேசுவதில் தீவிரமாக இருப்பதாக உயர்நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்துள்ளார். 2019-ஆம் ஆண்டு உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும், இதுதொடர்பாக பல்வேறு சுற்றறிக்கைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பணியில் இருக்கும் போக்குவரத்து காவலர்கள் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதில் கவனம் செலுத்தி வருவதாக நீதிபதி குறிப்பிட்டுள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் பொதுநலனை கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை காவல்துறை தீவிரமாகக் கருதி உரிய நடவடிக்கை

Read More

சுதந்திர தினத்தை முன்னிட்டு மாபெரும் ரத்ததான முகாம்! ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம்.

திருவொற்றியூர்: சுதந்திர தினத்தை முன்னிட்டு திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் நடைபெற்ற சிறப்பு ரத்ததான முகாமில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மருத்துவர் டாக்டர் எஸ். சௌமியா தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர்கள் எஸ். ரங்கநாதன், அவந்திகா மற்றும் பள்ளி முதல்வர் மலர்விழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரத்ததானம் செய்தவர்களை ஊக்கப்படுத்தும்

Read More

காசோலை மோசடி வழக்கில் சரத்குமாருக்கு சம்மன்! செப். 10-ல் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு

சென்னை:   காசோலை மோசடி வழக்கில் நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமார், வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.   ரூ.2 கோடி கடன் பெற்றதற்காக சரத்குமார் வழங்கிய காசோலை, வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியதாகக் கூறி ஸ்ரீகிருஷ்ணா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.   இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், சரத்குமார் செப்டம்பர் 10-ஆம் தேதி நேரில்

Read More

சிட்கோ நிலம் முறைகேடு வழக்கு மா.சுப்பிரமணியன், மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு

சென்னை: கிண்டியில் உள்ள சிட்கோ நிறுவனத்துக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடாக அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Read More

டாஸ்மாக் கடைகளில் காவலர்களை பணியமர்த்த உத்தரவு

சென்னை, ஆக. 8–   நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்று உள்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் நுகர்வோர் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   அவ்வாறு அளிக்கப்படும் புகார்களின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Read More

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. கைது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதுங்கிருந்து பிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றி வரும் சரவணப்பெருமாள், ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.   பரமக்குடி பகுதியில் மணல் குவாரி நடத்தி வரும் ஒருவரிடம், சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.   இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.   அதன்படி, சம்பந்தப்பட்ட

Read More

அனைவரும் விசாரணை வளையத்தில்!

சென்னை, ஆக. 6– ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகாரின் பேரில் ஆய்வாளர் புகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மற்றொரு ஆய்வாளர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை விசாரித்த உதவி ஆணையர் முதல் காவலர் வரை 100-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசாரின் செயல்பாடுகள் குறித்தும், அவர்கள் மீது வேறு ஏதேனும் முறைகேடு அல்லது புகார்கள் உள்ளனவா

Read More

கண்டன அறிக்கை ஹரி பிரபு மனோகர பூபதி.

“எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.”   எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் விஜய் தவறாக பயன்படுத்துவதாகத் தெரிகிறது.   பேச்சு சுதந்திரத்தை அடக்கும் வகையிலும், கருத்து தெரிவிக்கும் உரிமையை அச்சுறுத்தும் வகையிலும், எந்த நபரும் செயல்படத் தயங்கும் சூழலை உருவாக்கும் வகையிலும் ஆட்சி செயல்படக் கூடாது.   ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு

Read More

₹40 லட்சம் வசூல் வழக்கு: இன்ஸ்பெக்டர் புகாரி உள்பட 2 பேர் கைது.

சென்னை, ஆக. 4: சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதாக மிரட்டி ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) முகமது புகாரி மற்றும் சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தொழிலதிபர் அகில்குமார் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. புகாரில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்து சிறையில் அடைப்பதாக

Read More

உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்: அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சிராப்பள்ளி, ஆக. 3– உலக சாரணர் ஸ்கார்ஃப் தினத்தை முன்னிட்டு திருச்சிராப்பள்ளி பிலாட்டலிக் கிளப் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளப் தலைவர் லால்குடி விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலரும் யோகா ஆசிரியருமான விஜயகுமார் துவக்க உரையாற்றினார். நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி உலக சாரணர் ஸ்கார்ஃப் தினம்

Read More

Facebook