திண்டுக்கல் நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் ஆய்வாளர் மருதுபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னதாக பழனி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியபோது, விபத்து வழக்கு ஒன்றில் தொடர்புடையவர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது.
இதுகுறித்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, திண்டுக்கல் சரக டிஐஜி ஒழுங்கு நடவடிக்கையாக ஆய்வாளர் மருதுபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

