திருமணம் ஆகாத வயது வந்த ஆண், பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வைத்திருக்கும் உறவை தவறான நடத்தையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. எல்லாக் காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை என்பதையும், அதற்காக ஒருவரை ஏமாற்றியதாக தானாகவே கருத முடியாது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞருக்கு மீண்டும் பணி வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு, சம்மதத்துடன் கூடிய உறவுகள் தொடர்பான வழக்குகளில் முக்கிய முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

