உதவி கரம் நீட்டிய உதவி ஆய்வாளர் திருமலை – ஏழை மாணவிக்கு பள்ளி பை வழங்கி கல்விக்கு ஊக்கம்.

உதவி கரம் நீட்டிய உதவி ஆய்வாளர் திருமலை – ஏழை மாணவிக்கு பள்ளி பை வழங்கி கல்விக்கு ஊக்கம்.

சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் திருமலை, மனிதநேய செயலில் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.

ஆர்.கே. நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்வி பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர் பள்ளிக்குச் செல்ல தேவையான பள்ளி பை (School Bag) ஒன்றை வழங்கியுள்ளார்.

குடும்பத்தின் நிலையை உணர்ந்து தாமாக முன்வந்து உதவிய உதவி ஆய்வாளர் திருமலை, அந்த மாணவி கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்றும், தனது எதிர்காலத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றும் மனமார வாழ்த்தியுள்ளார்.

இந்த மனிதநேய செயல் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியையும் பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook