திருப்பூர்: தாராபுரம் ஐகோர்ட் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் புகார்தாரரும் முக்கிய அரசு சாட்சியுமான தங்கவேலை கொலை செய்ய முயன்ற வழக்கில், உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு போலீஸ் படை எஸ்.ஐ. சரவணன் (52) கைது செய்யப்பட்டார். கடந்த 7-ஆம் தேதி டூவீலரில் சென்ற தங்கவேலை காரில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே நந்தகுமார், பாபு, சரஸ்வதி, ஹேமா
Category: குற்றம்
சிறையில் விசாரணைக் கைதி மரணம். சிறைக் காவலர்கள் தாக்கி இருக்கலாம்.
சென்னையில் குட்கா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை உரிமையாளர் பாலாஜி திடீரென உயிரிழந்தார். மாரடைப்பால் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்த நிலையில், சிறைக் காவலர்கள் தாக்கியதால்தான் மரணம் ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
காவலர் கைது. இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.
கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்ற காவலர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், அழுதபடியே தனது நண்பரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவலர் வினோத் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
கணவன் கண்முன்னே தாய், 6 மாத மகள் பலி மாதவரம் ரவுண்டானா அருகே கண்டெய்னர் லாரி மோதி பரிதாபம்
சென்னை, ஜூலை 18: சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று நிகழ்ந்த கோர சாலை விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற தாயும், 6 மாத பெண் குழந்தையும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நித்தியானந்தம் (36), அவரது மனைவி ஷர்மிளா (28) மற்றும் 6 மாத மகள் பிரதிக்ஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த கண்டெய்னர் லாரி பைக்
கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன் கொலை. கோயிலுக்கு அழைத்துச் சென்று தீர்த்துக்கட்டிய மனைவி; காதலனுடன் தப்பிய இருவரும் கைது.
கிருஷ்ணகிரி: திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்ததாகக் கூறி, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோயிலுக்கு அழைத்துச் சென்று கணவனை மனைவி மற்றும் அவரது காதலன் இணைந்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில், யாசினி (20) கோயிலுக்கு செல்லும் வழியிலேயே தனது காதலன் யுகேந்தர் (20)-க்கு லைவ் லொகேஷன் அனுப்பி வரவழைத்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் சேர்ந்து கணவனை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துக்குப் பிறகு,
சிறைக் காவலர்கள் 3 பேர் கைது: கைதி மரண வழக்கில் அதிரடி நடவடிக்கை
நாகர்கோவில்: நாகர்கோவில் சிறையில் உயிரிழந்த கைதி சபரிவர்மன் மரணம் தொடர்பாக சிறை வார்டன் உட்பட மூன்று சிறைக் காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் சபரிவர்மனின் உடற்கூறாய்வு அறிக்கையில், அவரது உடலில் மொத்தம் 19 இடங்களில் காயங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கைகள், கால்கள் மற்றும் நெஞ்சுப் பகுதியில் காயங்கள் இருந்ததோடு, வலது கையில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உடற்கூறாய்வு அறிக்கையைத் தொடர்ந்து,
திமுக நிர்வாகி மீது கொலை முயற்சி: 3 பேர் கைது
சென்னை: தண்டையார்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி ராஜா (45) மீது வீட்டு வாசலிலேயே அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த ராஜா உடனடியாக மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஆர்.கே. நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (44), ரஞ்சித் (33),
உயிர்தப்பிய இளம் பெண் – மாஞ்சா நூலால்.
திருவொற்றியூரில் பரபரப்பு சென்னை: திருவொற்றியூரில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து சென்ற இளம் பெண்ணின் முகத்தில் திடீரென குறுக்கே வந்த மாஞ்சா நூல் மூக்குப் பகுதியில் அறுத்து காயம் ஏற்படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வலியால் அவதிப்பட்டாலும், தலைக்கவசம் அணிந்திருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு லேசான காயங்களுடன் உயிர்தப்பினார். தமிழகத்தில் மாஞ்சா நூல் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை அமலில் இருந்தாலும், சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூலால் அடிக்கடி விபத்துகள்
பட்டப்பகலில் வீட்டின் பின்கதவை உடைத்து 5 சவரன் நகை கொள்ளை; வாலிபர் கைது.
சென்னை அம்பத்தூர் அடுத்த ஒரகடம் எம்.ஜி.ஆர். தெருவில் உள்ள ஒரு வீட்டில், கடந்த 29-ஆம் தேதி பட்டப்பகலில் மர்ம நபர் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, பூஜை அறையில் இருந்த 5 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் ஒரகடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு
ரூ.20 கோடி மோசடி: இன்ஸ்பெக்டர் ஷீலா மேரி கைது
சென்னையில் குறைந்த விலையில் தங்கக்காசுகள் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் இருந்து சுமார் ரூ.20 கோடி வரை பணம் பெற்று மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கில், காவல் ஆய்வாளர் (இன்ஸ்பெக்டர்) ஷீலா மேரியை போலீசார் கைது செய்துள்ளனர். புகாரின் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில், சந்தை விலையை விட குறைந்த விலையில் தங்கக்காசுகள் கிடைக்கச் செய்வதாக நம்பிக்கை அளித்து, பல்வேறு நபர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு

