தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து மும்பை வந்த விமானத்தில் ரூ.11.82 கோடி மதிப்பிலான உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சாவை கடத்தி வந்ததாக கேரளத்தைச் சேர்ந்த மாடல் அழகி ஹர்ஷா சன்னி சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் அவரது டிராலி பேக்கை அதிகாரிகள் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, பேக்கிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின்
Author: vnewstamil
குற்றவாளிகளுடன் தொடர்பு: 2 காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்.
தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட மணிமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றிய எழுத்தர் கோபி மற்றும் தனிப்படை காவலர் மகேஷ் ஆகியோர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததுடன், அவர்களிடம் பணம் பெற்றதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தவறு செய்பவர்களுக்கு உடந்தையாக செயல்படும் காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தாம்பரம் காவல் துணை ஆணையர் வாக்கி டாக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சம்மதத்துடன் கூடிய உறவு தவறல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
திருமணம் ஆகாத வயது வந்த ஆண், பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வைத்திருக்கும் உறவை தவறான நடத்தையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. எல்லாக் காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை என்பதையும், அதற்காக ஒருவரை ஏமாற்றியதாக தானாகவே கருத முடியாது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞருக்கு மீண்டும்
இல்லத்தரசிகள் தற்கொலை. தமிழகம் முதலிடம்.
இல்லத்தரசிகள் தற்கொலை செய்வதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 48.9 சதவீதம் பேர் இல்லத்தரசிகள் என பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் தற்கொலை செய்துகொண்ட இல்லத்தரசிகளில் 13 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம்,
நக்சல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் பணியிடை நீக்கம்.
திண்டுக்கல் நக்சல் தடுப்பு பிரிவில் பணியாற்றி வரும் ஆய்வாளர் மருதுபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக பழனி சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியபோது, விபத்து வழக்கு ஒன்றில் தொடர்புடையவர்களிடம் லஞ்சம் பெற்றதாக புகார் எழுந்தது. இதுகுறித்து நடத்தப்பட்ட துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திண்டுக்கல் சரக டிஐஜி ஒழுங்கு நடவடிக்கையாக ஆய்வாளர் மருதுபாண்டியனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
₹20 கோடி மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.
குறைந்த விலையில் தங்க நாணயங்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் வழங்குவதாக கூறி நடைபெற்ற ₹20 கோடி மோசடி வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரபு மணி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி நடவடிக்கைகளில் பிரபு மணிக்கு உதவியதாக ஆய்வாளர் ஷீலா மேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல
மேல்முறையீடு நிலுவையில் இருந்தால் பரோல் உண்டா?
குற்ற வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், அந்த கைதிக்கு பரோல் வழங்க முடியுமா என்பது தொடர்பாக நீதித்துறையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தின் இரு வெவ்வேறு அமர்வுகள் முரண்பட்ட தீர்ப்புகளை வழங்கியதால், சட்டப்பூர்வமான தெளிவை ஏற்படுத்தும் நோக்கில் 5 நீதிபதிகள் அடங்கிய சிறப்பு அமர்வை அமைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேல்முறையீடு நிலுவையில் உள்ள கைதிகளுக்கு பரோல் வழங்கும் அதிகாரம்
சிங்கப்பெண் அதிரடிப்படையின் முதல் நடவடிக்கை..!
சென்னையில் பெண்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் அதிரடிப்படை மூலம் முதல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டில் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படும் சுரேஷ் என்பவரை, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட சுரேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்ட பிறகு பதிவான முதல் வழக்கு என்பதால் இந்த
கராத்தே போட்டியில் 33 பதக்கங்கள் வென்ற பரமக்குடி மாணவி; முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற விருப்பம்.
ராமநாதபுரம் மாவட்டம், காரடர்ந்தகுடியைச் சேர்ந்த குரு அனுஸ்ரீ, பரமக்குடி ஏ.வி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். கடந்த ஐந்து ஆண்டுகளாக தற்காப்புக் கலையான கராத்தேவில் சிறப்பாகப் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்து வருகிறார். தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் பங்கேற்றுள்ள குரு அனுஸ்ரீ, அகில இந்திய அளவிலான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
உதவி கரம் நீட்டிய உதவி ஆய்வாளர் திருமலை – ஏழை மாணவிக்கு பள்ளி பை வழங்கி கல்விக்கு ஊக்கம்.
சென்னை ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் உதவி ஆய்வாளர் திருமலை, மனிதநேய செயலில் அப்பகுதி மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். ஆர்.கே. நகர் பகுதியில் வசித்து வரும் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாணவியின் கல்வி பயணத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர் பள்ளிக்குச் செல்ல தேவையான பள்ளி பை (School Bag) ஒன்றை வழங்கியுள்ளார். குடும்பத்தின் நிலையை உணர்ந்து தாமாக முன்வந்து உதவிய உதவி ஆய்வாளர் திருமலை,

