டாஸ்மாக் கடைகளில் காவலர்களை பணியமர்த்த உத்தரவு

சென்னை, ஆக. 8–   நுகர்வோர் கூட்டம் அதிகமாக உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் காவலர்களை பணியமர்த்த வேண்டும் என்று உள்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு கூடுதல் தொகை வசூலிப்பது தொடர்பாக புகார்கள் எழுந்தால், சம்பந்தப்பட்ட காவலர்களிடம் நுகர்வோர் நேரடியாக புகார் அளிக்கலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   அவ்வாறு அளிக்கப்படும் புகார்களின் மீது காவல்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

Read More

ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. கைது. லஞ்ச ஒழிப்புத்துறையினர் பதுங்கிருந்து பிடித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வருவாய் கோட்டாட்சியராக (ஆர்.டி.ஓ.) பணியாற்றி வரும் சரவணப்பெருமாள், ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.   பரமக்குடி பகுதியில் மணல் குவாரி நடத்தி வரும் ஒருவரிடம், சான்றிதழ் வழங்குவதற்காக ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.   இதுகுறித்து அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.   அதன்படி, சம்பந்தப்பட்ட

Read More

கண்டன அறிக்கை ஹரி பிரபு மனோகர பூபதி.

“எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது ஜனநாயகத்திற்கு ஏற்றதல்ல.”   எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினை கைது செய்யும் அளவிற்கு அதிகாரத்தை முதலமைச்சர் விஜய் தவறாக பயன்படுத்துவதாகத் தெரிகிறது.   பேச்சு சுதந்திரத்தை அடக்கும் வகையிலும், கருத்து தெரிவிக்கும் உரிமையை அச்சுறுத்தும் வகையிலும், எந்த நபரும் செயல்படத் தயங்கும் சூழலை உருவாக்கும் வகையிலும் ஆட்சி செயல்படக் கூடாது.   ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடுகளுக்கு

Read More

பள்ளிக்கரணையில் 7-வது இலவச கண் மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.

சென்னை, ஜூலை 26: மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர் சார்பில், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் அமைப்பின் ஒத்துழைப்புடனும், போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையின் மருத்துவக் குழுவின் பங்களிப்புடனும், பள்ளிக்கரணை மதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 7-வது இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் 106 பேருக்கு கண் பரிசோதனை, 49 பேருக்கு இலவச ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை

Read More

ரூ.50 லட்சம் கேட்டு தொழிலதிபர் கடத்தல். 4 பேர் கொண்ட கும்பல் கைது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் தொழிலதிபர் கமலேஷ் ஆபிரகாம் என்பவரை காரில் கடத்தி, ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டிய 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். பாரிமுனையில் பாத்திரக் கடை நடத்தி வரும் கமலேஷ், நேற்று காலை நேரு பூங்கா பகுதியில் கடத்தப்பட்டார். பின்னர் ரூ.50 லட்சம் கேட்ட கும்பல், இறுதியில் ரூ.30 லட்சம் தர வேண்டும் என கூறி, 5 சவரன் நகையையும் பறித்துக் கொண்டு பணத்தை எடுத்து

Read More

காவல்துறை உதவி ஆய்வாளர் கைது. அரசு சாட்சியை கொல்ல சதி.

திருப்பூர்: தாராபுரம் ஐகோர்ட் வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கில் புகார்தாரரும் முக்கிய அரசு சாட்சியுமான தங்கவேலை கொலை செய்ய முயன்ற வழக்கில், உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட சிறப்பு போலீஸ் படை எஸ்.ஐ. சரவணன் (52) கைது செய்யப்பட்டார். கடந்த 7-ஆம் தேதி டூவீலரில் சென்ற தங்கவேலை காரில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே நந்தகுமார், பாபு, சரஸ்வதி, ஹேமா

Read More

காவலர் கைது. இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.

கோவை: வெள்ளக்கிணறு பகுதியில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம் பெண்ணை விசாரணை என்ற பெயரில் தனியாக அழைத்துச் சென்ற காவலர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி புகார் எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இளம் பெண், அழுதபடியே தனது நண்பரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தார். இதையடுத்து உயரதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் காவலர் வினோத் குமார் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

Read More

பட்டா கத்தியுடன் இளைஞர் மிரட்டல்!

சென்னை பெரம்பூர் பகுதியில் ஸ்கூட்டரில் அதிவேகமாக வந்த இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் மோதியதை தட்டிக் கேட்ட முதியவரை பட்டா கத்தியைக் காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோதல் குறித்து முதியவர் கேள்வி எழுப்பியதால் ஆத்திரமடைந்த இளைஞர், இடுப்பில் மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து மிரட்டியதாக கூறப்படுகிறது. அச்சமடைந்த முதியவர் உடனடியாக வீட்டிற்குள் சென்றார். ஆனால் அதன்பிறகும் இளைஞர் அங்கிருந்து செல்லாமல், தொடர்ந்து கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.

Read More

சம்மதத்துடன் கூடிய உறவு தவறல்ல: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

திருமணம் ஆகாத வயது வந்த ஆண், பெண் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் வைத்திருக்கும் உறவை தவறான நடத்தையாகக் கருத முடியாது என்று உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது. எல்லாக் காதல் உறவுகளும் திருமணத்தில் முடிவதில்லை என்பதையும், அதற்காக ஒருவரை ஏமாற்றியதாக தானாகவே கருத முடியாது என்பதையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றியதாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்த இளைஞருக்கு மீண்டும்

Read More

இல்லத்தரசிகள் தற்கொலை. தமிழகம் முதலிடம்.

இல்லத்தரசிகள் தற்கொலை செய்வதில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 2,821 இல்லத்தரசிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நாடு முழுவதும் தற்கொலை செய்து கொண்ட பெண்களில் 48.9 சதவீதம் பேர் இல்லத்தரசிகள் என பதிவாகியுள்ளது. மேலும், நாட்டில் தற்கொலை செய்துகொண்ட இல்லத்தரசிகளில் 13 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்பப் பிரச்சினைகள், மன அழுத்தம்,

Read More

Facebook