புதுக்கோட்டை, ஏப். 4: மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய குடும்பத்தினரை மக்கள் சக்தி இயக்கத்தினர் பாராட்டி நிதியுதவி வழங்கினர். புதுக்கோட்டை காந்திநகர் பகுதியைச் சேர்ந்த க. பாண்டியன் (36) வண்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அறந்தாங்கி பகுதியில் வேலைக்குச் சென்றபோது தவறி கீழே விழுந்து காயமடைந்தார். முதலில் அறந்தாங்கி மற்றும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார்
Category: சமீபத்திய செய்திகள்
வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி.
வியாபாரிகள் சங்க நிர்வாகியின் தாயார் காலமானார்: பாலகுருசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி. சென்னை, ஏப். 2- வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்க நிர்வாகியின் தாயார் மறைவுக்கு சங்க நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். மறைவு: சென்னை காலிங்கராயன் தெருவைச் சேர்ந்தவர் A.V.கருணாகரன். இவர் வடசென்னை பொது வியாபாரிகள் நல சங்கத்தின் முக்கிய நிர்வாகியாகப் பொறுப்பு வகித்து வருகிறார். இவருடைய தாயார் V.சண்முகத்தாய்
நகை அடகு தொழிலாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள்.
ராணிப்பேட்டை, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகை அடகு தொழில் புரிவோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் காலத்தில் பண பரிவர்த்தனை மற்றும் நகை அடகு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்
சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கொசுப்புழு ஒழிப்பு
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கொசுப்புழு ஒழிப்பு தீவிரம். சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கொசுப்புழு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. சாக்கடை தண்ணீரில் கொசுக்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பகுதிநேர ஆய்வுகள் நடத்தப்பட்டு, பாதாள சாக்கடை மூடிகள், நீர் தேங்கும்
இறந்தும் உயிர் வாழ்கிறார். மோனிக்ராஜ்.
கோவை: சாலை விபத்தில் படுகாயமடைந்து மூளைச்சாவு அடைந்த 24 வயதுடைய இளைஞர் மோனிக் ராஜ் அவர்களின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானமாக வழங்கி மனிதநேயத்தின் உயர்ந்த எடுத்துக்காட்டை உருவாக்கியுள்ளனர். விபத்துக்குப் பிறகு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த மோனிக் ராஜ் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவரது பெற்றோர் மனிதாபிமான மனப்பான்மையுடன் இதயம், சிறுநீரகங்கள் உள்ளிட்ட முக்கிய உடல் உறுப்புகளை தானமாக அளிக்க சம்மதித்தனர். அவரது உடல் உறுப்புகள்
கொடுங்கையூரில் K.G. பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ சாயீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் “K.G. பட்டமளிப்பு விழா” இன்று காலை அப்பள்ளியின் டேக் வள்ளலார் அரங்கத்தில் பள்ளி தாளாளர் டி.எஸ். தியாகராஜன் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழா பள்ளி முதல்வர் டி.எல். சுந்தரதாஸ் முன்னிலையில் நடைபெற்றது. மாணவர்கள் ரைம்ஸ் பாடுதல், கதை சொல்லுதல் மற்றும் இனிய பாடல்களை பாடி கலைநிகழ்ச்சிகள் வழங்கி விழாவை சிறப்பாக
தந்தையின் கனவை நினைவாக்கும் மகன் ஹரி பிரபு
சென்னை: வட சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், வசிக்கும் பொதுமக்களின் நலனை முன்னிட்டு தெய்வதிரு மனோகரா பூபதி அறக்கட்டளை சார்பில் இலவச உணவு மற்றும் இலவச கல்வி வழங்கும் சமூகப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. “முதலில் தட்டில் நிரப்புவோம், பிறகு புத்தகத்தைத் திறப்போம்” என்ற உயர்ந்த நோக்கத்துடன், பசியால் கல்வி தடைபடாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மறைந்த தெய்வதிரு மனோகரா பூபதியின் சமூக சேவை
ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை அருகே தினசரி அன்னதானம் துவக்கம்.
சென்னை, மார்ச் 6 : சென்னையில் ஆர் எஸ் ஆர் எம் மருத்துவமனை அருகில், தெய்வத்திரு ஐயா மனோகர் பூபதி அவர்களின் நினைவாக தொடங்கப்பட்ட மனோகர் பூபதி அறக்கட்டளை சார்பில் இன்று (மார்ச் 6) முதல் தினசரி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இன்று வெள்ளிக்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்ற இந்த நிகழ்வின் மூலம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களுடன் வரும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் கண்டனம் – 90 சதவீதம் ஊழல்வாதிகள்.
சென்னை, பிப்.14: சென்னை உயர்நீதிமன்றம் விசாரணை செய்யப்பட்ட ஒரு அவமதிப்பு மனுவை முடித்து வைத்து வழங்கிய தீர்ப்பில், நீதிபதி பி.வேல்முருகன் காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான கருத்துக்களை பதிவு செய்தார். தற்போதைய நிலையில் காவல் துறையில் 90 சதவீத அதிகாரிகள் ஊழல்வாதிகளாகவோ அல்லது குற்றவியல் விசாரணைகளை திறம்பட நடத்த போதுமான திறன் இல்லாதவர்களாகவோ உள்ளனர் என்றும், 10 சதவீத அதிகாரிகள் மட்டுமே நேர்மையும் திறமையும் கொண்டவர்களாக செயல்படுகின்றனர் என்றும்
ஏழு பேருக்கு மறுவாழ்வளித்த 14 வயது சிறுவன் – குடும்பத்தினருக்கு மக்கள் சக்தி இயக்கம் பாராட்டு
திருச்சி, திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தீவிர சிகிச்சை பலனின்றி மூளைச்சாவு அடைந்தார். மருத்துவக் குழுவினர் மூளைச்சாவை உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, சிறுவனின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் கல்லீரல், கணையம், சிறுகுடல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள் மற்றும் தோல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. இதில் ஒரு

