சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கி வரும் 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சமூக அன்னை ஸ்ரீ காமாட்சி கல்வி அறக்கட்டளை, கடந்த சில ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த வழிகாட்டுதலை வழங்கி வருகிறது.
இந்த நிலையில், தெய்வத்திரு மனோகரா பூபதி அறக்கட்டளை சார்பில் அன்னை ஸ்ரீ காமாட்சி கல்வி அறக்கட்டளைக்கு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது.
இந்த தொகையை மனோகரா பூபதி அறக்கட்டளையின் நிறுவனரும் தலைவருமான ஹரி பிரபு வழங்கினார். இத்தொகை பள்ளியில் கல்வி பயிலும் மாணவர்களின் கட்டண செலவிற்காக பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

