சென்னை, மே 28:
சென்னை பள்ளிக்கரணையில் உள்ள மதர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஐந்தாவது இலவச கண் சிகிச்சை முகாம் அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றது.
மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்ட் சென்டர், ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை நோபல் ஹார்ட் மற்றும் செட்டிநாடு மருத்துவமனை ஆகியவற்றின் கூட்டு ஒத்துழைப்புடன் இந்த முகாம் நடத்தப்பட்டது. கடந்த 24/05/2026 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
சர்க்கரை பரிசோதனை
இந்த முகாமில் மொத்தம் 52 பேருக்கு விரிவான கண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 43 பேருக்கு இலவச இரத்த அழுத்தம் (பி.பி) மற்றும் சர்க்கரை நோய் (அரிசிபத்திரி) பரிசோதனைகளும் செய்யப்பட்டன. இதில் கண் குறைபாடு கண்டறியப்பட்ட 15 நபர்களுக்கு விலையில்லா மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
செட்டிநாடு மருத்துவமனைக்கு அனுமதி
பரிசோதனையின் போது, 8 நோயாளிகளுக்கு கண் புரை (Cataract) பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இதையடுத்து அவர்கள் மேல்சிகிச்சைக்காக செட்டிநாடு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சலுகை விலையில் மருத்துவ உபகரணங்கள்
தொடர்ந்து, முகாமில் பங்கேற்ற தேவையுள்ள நோயாளிகளுக்கு கழுத்து மற்றும் இடுப்பு பட்டைகள் (Belts), முழங்கால் உறைகள் (Knee socks), மோனிசன் பாம், கணுக்கால் உறைகள், வலி நிவாரணி ஸ்ப்ரே, ஜெல் மற்றும் ரிஸ்ட் பேண்ட் (Wrist band) ஆகியவை மிகக் குறைந்த சலுகை விலையில் வழங்கப்பட்டன.
இவ்விழா மற்றும் சிகிச்சை முகாமினை வெற்றிகரமாக நடத்துவதற்கு தலைவர் மகேந்திர-குணவந்தி பகாரியா, துணைத் தலைவர் பிரவீன்-நீதா கும்பாட், செயலாளர் நரேந்திர காண்டேட், பொருளாளர் வசந்த் பரடியா, உமேத் பாப்னா, தீபக் பகாரியா, ஜீத்து சீர்வி, ஸ்ரீகாந்த், அரவிந்த் சோரடியா, பிர்மாராம் மற்றும் நாராயணலால் சீர்வி ஆகியோர் முன்னின்று தங்களது சிறப்பான ஒத்துழைப்பினை வழங்கினர்.

