கஞ்சா போதையை தட்டி கேட்ட மாணவன் மரணம். மூன்று பேர் கைது.

கஞ்சா போதையை தட்டி கேட்ட மாணவன் மரணம். மூன்று பேர் கைது.

சென்னை திருவொற்றியூரில் கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்தை தட்டிக் கேட்ட மாணவர் தனுஷ் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிற்கு செல்வதற்காக காத்திருந்த மாணவர் தனுஷை, பள்ளி அருகே உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

மேலும், தனுஷின் கழுத்தில் கால் வைத்து மிதித்ததாகவும், இதில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

கஞ்சா மற்றும் போதைப் பழக்கத்தை தட்டிக் கேட்டதற்காக மாணவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், திருவொற்றியூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook