போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!  திருவொற்றியூர் தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! திருவொற்றியூர் தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு காவல்துறை விழிப்புணர்வு

திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட சாத்தாங்காடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், இன்று போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் சாத்தாங்காடு காவல் ஆய்வாளர் அமீர் அலி கான், மாணவ, மாணவிகளிடம் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல், மன ரீதியான பாதிப்புகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார்.

 

மேலும், போதைப்பொருட்களின் தீமைகள் குறித்து தங்களது பெற்றோர்களுக்கும் எடுத்துக்கூறி, போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை குடும்பத்திலும் ஏற்படுத்த வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

 

இந்த நிகழ்ச்சியில் சாத்தாங்காடு காவல் உதவி ஆய்வாளர் பாலாஜி, காவலர்கள் ரஞ்சித் மற்றும் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை பெற்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook