சென்னை: மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்டு சென்டர் சார்பில், எஸ்.எஸ். ஜெயின் சங்கம் புரசைவாக்கம் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புடன், பரம பூஜ்ய ஆச்சார்ய சம்ராட் ஸ்ரீ ஆனந்த் ரிஷி ஜி மகாராஜ் சாஹேப் அவர்களின் 126-வது பிறந்த ஜெயந்தியை முன்னிட்டு, எட்டாவது இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
சென்னை அடையாறு VHS மருத்துவமனை குழுவினரின் சேவையுடன், 10.08.2026 திங்கட்கிழமை காலை ஸ்ரீ ஆதர்ஷ் ஜ்யோதி ஜி மகாராஜ் சாஹேப் அவர்களின் மாங்கலிக் நிகழ்ச்சிக்குப் பின்னர், காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஸ்ரீ AMKM ஜெயின் மெமோரியல் டிரஸ்ட் வளாகத்தில் இம்முகாம் நடைபெற்றது.
முகாமில் மொத்தம் 76 பேருக்கு கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 45 பேருக்கு இலவசமாக கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டன. பரிசோதனையின்போது 3 பேருக்கு கண்புரை (Cataract) அறுவை சிகிச்சை தேவைப்படுவது கண்டறியப்பட்டு, மேல்சிகிச்சைக்காக VHS மருத்துவமனை, அடையாறுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், தேவையுள்ள நோயாளிகளுக்கு கழுத்து மற்றும் இடுப்புப் பட்டைகள், முழங்கால் காலுறைகள், மூனிசன் பாம், ஹீல் சாக்ஸ், ஸ்ப்ரே, ஜெல் மற்றும் ரிஸ்ட் பேண்ட் உள்ளிட்ட மருத்துவப் பொருட்கள் குறைந்த விலையில் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு எஸ்.எஸ். ஜெயின் சங்க நிர்வாகிகள் லலேஷ்ஜி காங்கரியா, தர்மிசந்த்ஜி கோத்தாரி, கௌதம்ஜி கூக்லியா, மகேந்திரஜி புங்கலியா, மகாவீர் இன்டர்நேஷனல் சென்னை கோல்டு தலைவர் மகேந்திரா–குணவந்தி பகாரியா, துணைத் தலைவர் பிரவீன்–நீதா கும்பட், செயலாளர் நரேந்திர காந்தேட், பொருளாளர் பசந்த் பரடியா, உமேத் பாஃப்னா, டாக்டர் முரளி மற்றும் நாராயண்லால் சீர்வி ஆகியோர் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினர்.
பொதுமக்களின் நலனை முன்னிறுத்தி நடைபெற்ற இம்முகாம் மூலம் ஏராளமானோர் பயனடைந்தனர்.

