சமூக நலக்கூடம் – வடக்கு வட்டார துணை ஆணையர் நேரில் ஆய்வு!

சென்னை, அக்டோபர் 27: பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம் 4, வார்டு 38-க்கு உட்பட்ட கருணாநிதி நகர் 3-வது தெரு பகுதியில், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி முயற்சியால், பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) மூலம் கட்டப்பட்டு வரும் சமூக நலக்கூடத்தை வடக்கு வட்டார துணை ஆணையர் அவர்களுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் முயற்சியால் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்திட்டத்தின் கட்டுமானப்

Read More

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் மருத்துவர் வே.க.ராஜீவ்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், பட்டணம்காத்தான் ஊராட்சியில் ஓஎன்ஜிசி காவிரி அசெட் சார்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தைத் திருவாடானை சட்டமன்ற உறுப்பினரும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சருமான மருத்துவர் வே.க. ராஜீவ் திறந்து வைத்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பட்டணம்காத்தான் ஊராட்சிக்கு உட்பட்ட சேதுபதி நகர் இரண்டாவது தெருவில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை, மழையையும் பொருட்படுத்தாமல் அமைச்சர் மருத்துவர்

Read More

மின்கசிவால் உயிர் தப்பிய துப்புரவுத் தொழிலாளி! உடனடி நடவடிக்கை எடுத்த கவுன்சிலர் யூ. கணேசன் – பொதுமக்கள் பாராட்டு!

சென்னை: சென்னை ஆர்.கே. நகர் தொகுதி, 38-வது வட்டத்திற்குட்பட்ட வினோபா நகர் பகுதியில் ஏற்பட்ட மின்கசிவால் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த தகவல் அறிந்த 38-வது வார்டு கவுன்சிலரும், மண்டலக் குழுத் தலைவருமான யூ. கணேசன் உடனடியாகத் துரித நடவடிக்கை மேற்கொண்டார். இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு, மின்கசிவு பிரச்சினை சரிசெய்யப்பட்டது. உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்து, அசம்பாவிதம் ஏற்படாமல்

Read More

ஆர்.எஸ்.எஸ். சுயம்சேவகர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலம்! 250-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

வாலாஜாபேட்டை: ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தொடங்கப்பட்ட விஜயதசமியை முன்னிட்டு, நாடு முழுவதும் சுயம்சேவகர்களின் சீருடை அணிவகுப்பு ஊர்வலங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் நடைபெற்ற அணிவகுப்பு ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட சுயம்சேவகர்கள் கலந்து கொண்டனர்.   சட்டங்களை மதித்தல், பொது சொத்துகளைப் பாதுகாத்தல், பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரித்தல், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுதல், நேர்மையான வாழ்க்கையை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட குடிமைப் பொறுப்புகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை

Read More

தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.25 லட்சத்தில் வன உயிரினப் புத்தாக்க வளர் மையம்! அமைச்சர் மருத்துவர் வி.கே. ராஜீவ் திறந்து வைத்தார்!

ராமநாதபுரம், அக்டோபர் 23: ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வட்டம், தங்கச்சிமடத்தில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில், வனத்துறை சார்பில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வன உயிரினப் புத்தாக்க வளர் மையத்தைத் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் மருத்துவர் வி.கே. ராஜீவ் திறந்து வைத்து பார்வையிட்டார். வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்துவதோடு, பல்லுயிர்ப் பெருக்கத்தின் முக்கியத்துவம், பறவைகளின் வாழ்வியல், அவற்றின்

Read More

ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவதா? மாநகராட்சி நிர்வாகத்துக்கு தொழிலாளர் சங்கம் கடும் கண்டனம்!

சென்னை, திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலத்தில் அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு நடப்பு மாதத்திற்கான சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கெனவே குறைந்த ஊதியத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் தவித்து வரும் ஏழைத் தொழிலாளர்களுக்கு, கிடைக்க வேண்டிய சொற்ப சம்பளத்தையும் உரிய நேரத்தில் வழங்காமல் காலதாமதம் செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் செயலாகும் என சென்னை பொது தொழிலாளர் சங்கம் (CITU) கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை

Read More

தெருவிளக்கு பராமரிப்புப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு – நிலுவைத் தொகையைப் பெற்றுத்தரக் கோரிக்கை!

சென்னை: சென்னை மாநகராட்சியின் பல்வேறு மண்டலங்களில் தெருவிளக்குகள் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.   சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் தெருவிளக்கு பராமரிப்புப் பணிகளைத் தனியார் ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக

Read More

“ஏன் முடியாது?” — உழைக்கும் மக்களின் உரிமைக்கான கேள்வி. “எம்.எல்.ஏ. உதவியாளருக்கு ரூ.25,000 சம்பளம் வழங்க வேண்டும் என்று நினைக்கும் முதலமைச்சரால், தூய்மைப் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.25,000 ஊதியம் வழங்க ஏன் முடியாது?”

“எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோவில் வருகிறோம் என்று கூறியவுடன், அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கார் வழங்க முடிகிறது. ஆனால், நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் மட்டும் என்ன பிரச்னை?” இது வெறும் ரூ.25,000 சம்பளம் குறித்த கேள்வி அல்ல… உழைப்புக்கு வழங்கப்படும் மரியாதை குறித்த கேள்வி. மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் முன்னுரிமைகள் யாருக்காக? அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிகளுக்கா? அல்லது அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத்

Read More

அரசு அலுவலகங்களில் அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்படுமா?

சென்னை: அரசு அலுவலகங்களில் சீருடை அணியாமல் பணியாற்றும் அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் பணிநேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை கட்டாயமாக அணிய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு அலுவலகங்களுக்கு பல்வேறு பணிகளுக்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், அங்கு பணியாற்றுபவர்களில் யார் அதிகாரி, யார் ஊழியர், யார் பயனாளர் என்பதை எளிதில் கண்டறிய முடியாத சூழல் நிலவுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள்

Read More

ஆயுள் கைதிகள் முன்விடுதலை: விரைந்து பரிசீலிக்க கோரிக்கை.

சென்னை:தமிழ்நாட்டில் நன்னடத்தை, குறிப்பிட்ட கால சிறைவாசம், வயது மற்றும் உடல்நிலை உள்ளிட்ட தகுதிகளை நிறைவு செய்தும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஆயுள் கைதிகளின் முன்கூட்டிய விடுதலை மனுக்களை புதிய அரசு விரைந்து பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சிறை நிர்வாகத்தின் பரிந்துரை இருந்தும் பல மனுக்கள் மீது முடிவு எடுக்கப்படாமல் நிலுவையில் இருப்பதால், கைதிகளின் குடும்பத்தினர் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். எனவே, “அனைவருக்குமான ஆட்சி” என்ற நோக்கத்துடன்

Read More

Facebook