“எம்.எல்.ஏ.க்கள் ஆட்டோவில் வருகிறோம் என்று கூறியவுடன், அவர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு கார் வழங்க முடிகிறது. ஆனால், நகரத்தை தூய்மையாக வைத்திருக்கும் சாதாரண உழைக்கும் மக்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் மட்டும் என்ன பிரச்னை?”
இது வெறும் ரூ.25,000 சம்பளம் குறித்த கேள்வி அல்ல… உழைப்புக்கு வழங்கப்படும் மரியாதை குறித்த கேள்வி.
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் அரசின் முன்னுரிமைகள் யாருக்காக?
அதிகாரத்தில் இருப்பவர்களின் வசதிகளுக்கா?
அல்லது அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கா?
ஒரு நகரம் சுத்தமாக இருக்க காரணமாக இருக்கும் தூய்மைப் பணியாளரின் உழைப்புக்கு மதிப்பு நிர்ணயிக்க முடியாத நிலையில், அவருடைய வாழ்க்கைக்கு குறைந்தபட்ச பாதுகாப்பான ஊதியம் வழங்குவது அரசின் கடமை அல்லவா?
“அதிகாரிகளுக்கு வசதி வழங்க முடியும் என்றால், உழைப்பாளிகளுக்கு உரிமையான ஊதியம் வழங்க ஏன் முடியாது?”
— பாரதி
தலைவர், உழைப்போர் உரிமை இயக்கம்

