சென்னை பெரம்பூரில் சூட்கேஸில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவத்தில், கொலை செய்யப்பட்டவர் அமீர் அலி என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் அவரது மனைவி மற்றும் அஸ்ராம் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில், அமீர் அலியின் மனைவி அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், “அமீர் அலி எனக்கு இரண்டாவது கணவர். பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். முதல் திருமண வாழ்க்கை குறித்து பேசியதற்காக என்னை
Category: குற்றம்
சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட சடலம்: மனைவி மற்றும் ஆண் நண்பர் அதிரடி கைது!
சென்னை: சென்னை பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேசில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், கொலையானவரின் மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். பரபரப்பு பின்னணி சென்னை பெரம்பூர் ரயில் நிலைய வளாகத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் கேட்பாரற்று கிடந்த ஒரு சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ
மாணவிக்கு பாலியல் சீண்டல் – போலீஸ் ஏட்டு கைது
சென்னை, ஜூன் 6– கடந்த ஆண்டு டிசம்பர் 20-ஆம் தேதி சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்ற ரயில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே வந்தபோது, சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கோவையைச் சேர்ந்த தலைமை காவலர் சேக் அப்துல்லா மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், சேக் அப்துல்லாவை பணியிடைநீக்கம் செய்தனர். இதனிடையே, கைது நடவடிக்கையைத் தவிர்க்க சேக்
வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து: பெண்ணின் தந்தை காயம்
சென்னை, ஜூன் 6 – சென்னை கொடுங்கையூரில் ஆட்டோவும் ஸ்கூட்டியும் மோதியதில் ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்து சம்பவமாக மாறியது. ஸ்கூட்டியை ஓட்டிவந்த வாஹிதாவுக்கும், ஆட்டோ ஓட்டுநர் பாலா என்பவருக்கும் இடையே விபத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த வாஹிதாவின் தந்தை ரஹீம் (40) வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பாலா, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹீமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த
“லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக நேர்மையானவர் தான் இருக்க வேண்டும்” – உயர்நீதிமன்றம் கருத்து.
தனியார் கட்டுமான நிறுவனரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தது தொடர்பாக, ஐபிஎஸ் அதிகாரி அருணுக்கு எதிரான வழக்கை விசாரித்தபோது உயர்நீதிமன்றம் முக்கிய கருத்தை பதிவு செய்தது. அதில், லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குனர் பதவியில் நற்பெயர் மற்றும் நேர்மை கொண்ட அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். மேலும், உயர்ந்த பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளின் செயல்பாடுகள் பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும்
சட்டவிரோத சூதாட்டம் – 5 பேர் கைது ரூ.80.58 லட்சம் பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல்.
சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது, பணம் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேரை போலீசார் கைது
புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி – உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
பழனி, மே 28: புகார் அளிக்க காவல் நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் பழனி தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜகோபால் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு, ஒரு பெண் தனது பிரச்சினை தொடர்பாக புகார் அளிக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரிடம் விசாரணை மேற்கொண்ட உதவி ஆய்வாளர் ராஜகோபால், பின்னர் அந்த
24 மணி நேரத்துக்குள் பணம் மீட்பு: ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு காவலர்களின் அதிவேக நடவடிக்கை.
சென்னை, மே 26: சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பவர் ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் வெங்கடேசன் என்பவர் பிளம்பர் தொழில் செய்து வருகிறார். இவர் தனது மகனின் பள்ளி கட்டணத்திற்காக வைத்திருந்த ரூ.31,200/- பணத்தை தவறவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேசன், உடனடியாக ஆர்.கே.நகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆலோசனையின் பேரில் காவலர் இருளப்பன் சம்பவம் நடந்த பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா
தாயின் கண் முன்னே மகளுக்கு பாலியல் துன்புறுத்தல் – முன்னாள் அமைச்சரின் மகன் கைது; சில மணி நேரத்தில் ஜாமீன்
உத்தரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகரில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. தாயின் கண் முன்னிலையில் இளம்பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படும் வழக்கில், பாஜக முன்னாள் அமைச்சரின் மகன் ஆர்யமான் கைது செய்யப்பட்டார். ஆனால் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஜாமீனில் விடுவிக்கப்பட்டதால் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்ததாக
புழல் சிறையில் போதை மாத்திரைகள் பறிமுதல்: பாதுகாப்பு குறித்து கேள்வி எழும் நிலை.
சென்னை: புழல் மத்திய சிறையில் பரபரப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது. விசாரணை கைதிகள் தங்கியிருந்த அறையில் நேற்று அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, போதைப்பொருள் விற்பனை வழக்கில் கைதான வில்லிவாக்கத்தை சேர்ந்த ரவுடி செல்வம் (32) மற்றும் அரும்பாக்கம் ரவுடி கணேஷ் (38) ஆகியோரின் அறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து, அவை உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

