சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி மீது நிர்வாக நடவடிக்கை எடுக்க விசிலன்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, மாவட்ட நீதிபதி சங்கர் கணேஷுக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்க தேவையான விசாரணையை உறுதி செய்வதற்காக அளிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் விசிலன்ஸ் பதிவாளர் சமர்பிக்கும் அறிக்கையை சென்னை உயர்நீதிமன்றத்தின் நிர்வாகக் குழு மற்றும்
Category: குற்றம்
காவல் உதவி ஆய்வாளர் கைது. பெண்ணை கொலை செய்ய முயன்றதால்.
தருமபுரி அருகே அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையை குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த பெண்ணுடன், அங்கு பணியாற்றிய துணை காவல் ஆய்வாளர் (SSI) தவறான தொடர்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர், அந்த விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், சம்பவம் வெளிச்சம் பார்க்காமல் தடுக்கும் நோக்கில் பெண்ணை கிணற்றில் தள்ளி கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக குற்றம்
16 வயது சிறுவன் தாக்கப்பட்டு உயிரிழப்பு
சென்னை வில்லிவாக்கத்தில் வேகமாக பைக்கில் சென்றதால் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, 16 வயது சிறுவன் ஹர்ஷ வர்தன் கற்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொளத்தூரைச் சேர்ந்த ஹர்ஷ வர்தன் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், 4 சிறுவர்கள் உட்பட 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சிலரை தேடிச் செல்வதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்தப்
திருப்பத்தூர் அருகே ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்
திருப்பத்தூரை அடுத்த காக்கனாம்பாளையத்தில், ஆந்திராவில் இருந்து கடத்தி கொண்டு வந்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு டன் செம்மரக்கட்டைகளை வனத்துறை அதிகாரிகள் சோதனையில் பறிமுதல் செய்தனர். கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாடு, செம்மரக் கடத்தல் மன்னர்களின் கூடாரமாக மாறிவிட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சபரிமலை கோயிலில் தங்கம் எடை குறைவு – உயர் நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவு
சபரிமலை கோயிலின் துவாரபாலகர் சிலைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் தங்கத்தில் காப்பர் கலந்துள்ளதால், அதன் எடை குறைந்ததாக புகார் எழுந்துள்ளது. மொத்தம் நான்கரை கிலோ தங்கம் இந்த சிலைகளுக்கு வழங்கப்பட்டதாகும். ஆனால், தற்போது எடை குறைவாக இருப்பது குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரத்தில் முழுமையான விசாரணை நடத்தி, 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய கண்காணிப்புத் துறைக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது
சென்னையில் நகைக்கடையில் கத்திக்காட்டி கொள்ளையடிக்க முயன்ற பெண் கைது சென்னை திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பான சம்பவம் இடம்பெற்றது. திருவொற்றியூர் காலடிப்பேட்டை மார்க்கெட் பகுதியில் 40 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருபவர் தேவராஜ் (65). நேற்று மதியம் அந்தக் கடைக்கு பர்தா அணிந்த நிலையில் வந்த பெண் ஒருவர், நகை வாங்குவது போல் நடித்து, மூன்று சவரன் தங்கச் சங்கிலி, ஒரு சவரன் வளையல், ஒரு சவரன் கம்பல் என மொத்தம்
அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்தவர்களை வழிப்பறி – போலீசாரை தாக்கிய கொள்ளையர்கள் கைது
சென்னை அண்ணாநகர் பகுதியில் அதிகாலையில் பிரியாணி சாப்பிட வந்த இளைஞரை வழிப்பறி செய்த இருவர், பின்னர் போலீசாரையே தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரியைச் சேர்ந்த தாமஸ் ஆல்வா எடிசன், தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் அண்ணாநகர் ஸ்டீபன் சாலையில் பிரியாணி சாப்பிட வந்திருந்தார். அப்போது, ஹர்ஷித் மற்றும் சல்மான் பாஷா எனும் இருவர் அவரை திடீரென தாக்கி, செல்போன் மற்றும் ரூ.2,000 பணத்தை பறித்து தப்பி சென்றனர். இந்த
வீட்டுமனை மோசடி – சகோதரிகள் கைது!
சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டுமனை வழங்குவதாக கூறி ஏமாற்றிய வழக்கில் இரு சகோதரிகள் கைது செய்யப்பட்டனர். Lakshmi Classic Homes Pvt. Ltd., என்ற தனியார் நிறுவனத்தை நடத்திவந்த அம்சவேனி மற்றும் ஸ்ரீலட்சுமி ஆகிய சகோதரிகள், 26 பேரிடமிருந்து சுமார் ரூ.3.71 கோடி முதலீடு பெற்றனர். வீட்டுமனை வழங்குவதாக நம்பிக்கை அளித்தும், நிலம் தரப்படாமல் பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து,
அரசு மருத்துவமனையில் நோயாளி தந்தையை வீல் சேர் இல்லாமல் இழுத்துச் சென்ற மகன்
கோவை அரசு பொது மருத்துவமனையில், சிகிச்சை முடித்து வெளியேறிய வயதான தந்தையை ஆட்டோவிற்கு அழைத்துச் செல்ல வீல் சேர் கேட்ட மகன், நீண்ட நேரம் காத்திருந்தும் வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்தபோதிலும், மருத்துவமனை ஊழியர்கள் வீல் சேர் வழங்க மறுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனால், சிகிச்சை முடித்த தந்தையை தானே இழுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டது. மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் சரியாக வழங்கப்படாததால், நோயாளிகள்
8 மாதங்களில் 228 பேர் பலி – தண்டவாளம் கடக்கும் அபாயம் குறித்து தெற்கு ரயில்வே எச்சரிக்கை
சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தண்டவாளம் கடக்கும் போது ரயில் மோதி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 8 மாதங்களிலேயே மட்டும் 228 பேர் இப்படியான விபத்துகளில் பலியாகியுள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பாதைகள் வழியாக சட்டவிரோதமாக தண்டவாளத்தை கடக்க முயல்வது, ஓடும் ரயிலில் ஏற முயல்வது, படியில் தொங்கிப் பயணிப்பது போன்றவை உயிருக்கு ஆபத்தான செயல்கள் என

