சென்னை பெரம்பூரில் சூட்கேஸில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட பரபரப்பு சம்பவத்தில், கொலை செய்யப்பட்டவர் அமீர் அலி என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் அவரது மனைவி மற்றும் அஸ்ராம் அலி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையில், அமீர் அலியின் மனைவி அளித்ததாக கூறப்படும் வாக்குமூலத்தில், “அமீர் அலி எனக்கு இரண்டாவது கணவர். பல பெண்களுடன் அவர் தொடர்பில் இருந்தார். முதல் திருமண வாழ்க்கை குறித்து பேசியதற்காக என்னை அடித்து துன்புறுத்தினார். அவரது நடத்தையால் ஆத்திரமடைந்த நான், அஸ்ராம் அலியுடன் சேர்ந்து அமீர் அலியை கொலை செய்தேன். பின்னர் அவரது ஆணுறுப்பையும் வெட்டினேன். என்னை ஏமாற்றிவிட்டு மற்ற பெண்களுடன் இருந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான முழு பின்னணி மற்றும் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

