வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து: பெண்ணின் தந்தை காயம்

வாக்குவாதம் முற்றி கத்திக்குத்து: பெண்ணின் தந்தை காயம்

சென்னை, ஜூன் 6 –

சென்னை கொடுங்கையூரில் ஆட்டோவும் ஸ்கூட்டியும் மோதியதில் ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்து சம்பவமாக மாறியது.

ஸ்கூட்டியை ஓட்டிவந்த வாஹிதாவுக்கும், ஆட்டோ ஓட்டுநர் பாலா என்பவருக்கும் இடையே விபத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த வாஹிதாவின் தந்தை ரஹீம் (40) வாக்குவாதத்தில் தலையிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆட்டோ ஓட்டுநர் பாலா, இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரஹீமை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த ரஹீம் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook