சட்டவிரோத சூதாட்டம் – 5 பேர் கைது ரூ.80.58 லட்சம் பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல்.

சட்டவிரோத சூதாட்டம் – 5 பேர் கைது ரூ.80.58 லட்சம் பணம், சீட்டுக்கட்டுகள் பறிமுதல்.

சென்னை:

சென்னையில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 நபர்களை தேனாம்பேட்டை காவல் நிலைய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

 

தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிலர் பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

 

இதையடுத்து, காவல் துறையினர் சம்பவ இடத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

 

அப்போது, பணம் வைத்து சீட்டு விளையாடி சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.80,58,030 ரொக்கப்பணம், சீட்டுக்கட்டுகள் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook