₹20 கோடி மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

₹20 கோடி மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

குறைந்த விலையில் தங்க நாணயங்கள் மற்றும் அசையாச் சொத்துக்கள் வழங்குவதாக கூறி நடைபெற்ற ₹20 கோடி மோசடி வழக்கில் தொடர்புடையதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து, பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான பிரபு மணி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி நடவடிக்கைகளில் பிரபு மணிக்கு உதவியதாக ஆய்வாளர் ஷீலா மேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையரின் உத்தரவின் பேரில் ஷீலா மேரி உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook