மழைநீரில் மறையும் சாலை பள்ளங்கள் — வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து  உயிரிழப்புகள் ஏற்படும் முன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

மழைநீரில் மறையும் சாலை பள்ளங்கள் — வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து உயிரிழப்புகள் ஏற்படும் முன் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தல்

சென்னை: சென்னையில் ஆங்காங்கே மழை பெய்து வரும் நிலையில், பல்வேறு சாலைகளில் ஏற்கனவே ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தையும், விபத்து அபாயத்தையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

சாலையில் பள்ளம் இருப்பது தெரியாத அளவிற்கு மழைநீர் தேங்கி நிற்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி கார் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளும் அந்த பள்ளங்களில் எதிர்பாராதவிதமாக சிக்கி விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களிலும், அதிக மழை பெய்யும் நேரங்களிலும் சாலை பள்ளங்களை கண்டறிவது மிகவும் கடினமாக இருப்பதால், விபத்து அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.

 

மழைக்காலம் தீவிரமடைவதற்கு முன்பாகவே சென்னை முழுவதும் உள்ள முக்கிய மற்றும் உட்புற சாலைகளை அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து, ஆபத்தான பள்ளங்களை உடனடியாக சீரமைக்க வேண்டும். மேலும், தற்காலிகமாக பள்ளங்கள் உள்ள இடங்களில் எச்சரிக்கை தடுப்புகள் மற்றும் போதிய எச்சரிக்கை குறியீடுகளை அமைத்து, வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

“உயிரிழப்பு ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பதைவிட, உயிரிழப்பு ஏற்படாமல் தடுப்பதே அரசின் முக்கிய பொறுப்பாக இருக்க வேண்டும்” என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

மேலும், சாலை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான பணிகளில் அலட்சியம் காரணமாக உயிரிழப்பு அல்லது கடுமையான விபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை உரிய துறை அதிகாரிகள் மீது சட்டரீதியாக நிர்ணயித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

வரும் மழைக்காலத்தில் சாலை பள்ளங்களால் எந்தவொரு உயிரிழப்பும் ஏற்படாத வகையில், சென்னை மாநகராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட சாலை பராமரிப்பு துறைகள் ஒருங்கிணைந்து அவசரகால அடிப்படையில் சாலைகளை ஆய்வு செய்து, பள்ளங்களை உடனடியாக மூடி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook