கடந்த 4 நாட்களில் 5 கொலைச் சம்பவங்கள் – சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 769 பேரிடம் போலீசார் விசாரணை!

கடந்த 4 நாட்களில் 5 கொலைச் சம்பவங்கள் – சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 769 பேரிடம் போலீசார் விசாரணை!

சென்னையில் ரவுடிகளுக்கு போலீஸ் கிடுக்கிப்பிடி! 2 நாட்களாகத் தீவிர வேட்டை – 147 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு!

 

கடந்த 4 நாட்களில் 5 கொலைச் சம்பவங்கள் – சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 769 பேரிடம் போலீசார் விசாரணை!

 

சென்னை மாநகரில் கடந்த நான்கு நாட்களில் அடுத்தடுத்து 5 கொலைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், குற்றச் சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகர காவல்துறையினர் ரவுடிகளுக்கு எதிரான தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

 

தொடர்ந்து இரண்டாவது நாளாக மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் ரவுடிகள் வேட்டையில், 631 ரவுடிகள் உள்ளிட்ட மொத்தம் 769 பேரைப் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

 

இந்த அதிரடி நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 49 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் உட்பட 147 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

தொடர்ச்சியாக நடைபெறும் கொலைச் சம்பவங்களால் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்கவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்தவும் காவல்துறையினர் இந்த நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 

சென்னையில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் ரவுடிகள் மற்றும் குற்றப் பின்னணி கொண்ட நபர்களைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook