தந்தையின் வேலை கிடைத்தும் நிலைக்காத நிம்மதி

தந்தையின் வேலை கிடைத்தும் நிலைக்காத நிம்மதி

சென்னை: ரயில்வேயில் வேலை செய்த தந்தை ரயிலில் அடிபட்டு உயிரிழந்த நிலையில், வாரிசு அடிப்படையில் கிடைத்த வேலைக்கு சென்றபோது தண்டவாளத்தை கடக்க முயன்ற மகனும் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திலகர் நகரை சேர்ந்த வேணுகோபால் கடந்த 2023ஆம் ஆண்டு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகன் கிஷோர் குமாருக்கு கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி வாரிசு அடிப்படையில் ரயில்வேயில் வேலை கிடைத்தது.

இந்நிலையில் நேற்று திருவொற்றியூர் ரயில் நிலையத்தில் வேலைக்கு செல்லும்போது கவனக்குறைவாக தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி கிஷோர் குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தந்தையும் மகனும் ஒரே விதமாக உயிரிழந்த இந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook