ராணிப்பேட்டை,
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026-க்கான தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை மாவட்டத்தில் நகை அடகு தொழில் புரிவோர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகளை பின்பற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான முனைவர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், தேர்தல் காலத்தில் பண பரிவர்த்தனை மற்றும் நகை அடகு நடவடிக்கைகளில் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பேபி இந்திரா, நேர்முக உதவியாளர்கள் கீதாலட்சுமி (பொது), பூமா (தேர்தல்), ராஜேஷ் (கணக்குகள்) உள்ளிட்டோர் மற்றும் அனைத்து தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

