சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கொசுப்புழு ஒழிப்பு

சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கொசுப்புழு ஒழிப்பு

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் கொசுப்புழு ஒழிப்பு தீவிரம்.

 

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில், சுகாதாரத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து கொசுப்புழு ஒழிப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.

 

சாக்கடை தண்ணீரில் கொசுக்கள் அதிகரிக்கும் அபாயம் இருப்பதால், நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, பகுதிநேர ஆய்வுகள் நடத்தப்பட்டு, பாதாள சாக்கடை மூடிகள், நீர் தேங்கும் இடங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது.

குறிப்பாக, பாதாள சாக்கடை மூடிகளை திறந்து சுத்தம் செய்வதுடன், அவற்றில் கொசுப்புழுக்கள் உருவாகாத வகையில் ஒழிப்பு மருந்துகள் தெளிக்கப்படுகின்றன. மேலும், வீதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுகாதார பணியாளர்கள் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு, தேவையான இடங்களில் மருந்து தெளிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கைகள் மூலம் டெங்கு, மலேரியா போன்ற கொசு மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் தங்கள் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், சுகாதாரத்துறையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மாநகராட்சியின் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook