உச்சநீதிமன்றத்தின் அதிரடி! அருண் ஐபிஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

உச்சநீதிமன்றத்தின் அதிரடி! அருண் ஐபிஎஸ் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு – நோட்டீஸ் அனுப்ப உத்தரவு!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிய உத்தரவைச் செயல்படுத்துவதில் காலதாமதம் செய்ததாகக் குற்றச்சாட்டு – சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் மற்றும் செம்பியம் காவல் ஆய்வாளருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்துவதில் காலதாமதம் செய்ததாகக் கூறி, சென்னை முன்னாள் காவல் ஆணையர் அருண் ஐபிஎஸ் மற்றும் செம்பியம் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இருவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. மேலும், இருவரும் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், அனுப்பப்பட்ட நோட்டீஸுக்கு உரிய பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook