சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு இன்று (நவம்பர் 19) பிற்பகல் 2.24 மணியளவில் காலமானார்.
கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தொடர்ந்து 70 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்ததாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வி.எஸ்.பாபுவின் மறைவு தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்: வல்ல முருகன்

