மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் பாலகிருஷ்ணன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் முத்து, தலைமைக்காவலர் பழனிவேல் ராஜன் மற்றும் காவலர் கலைச்செல்வி ஆகிய மூன்று பேருக்கும் சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து, மூவரும் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காவல் நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளதால், இந்த வழக்கில் அடுத்தகட்டமாக வெளியாகும் தகவல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
காவல் நிலையத்தில் நிகழ்ந்த உயிரிழப்புக்கான உண்மையான பின்னணி வெளிச்சத்திற்கு வருவதுடன், உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

