முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்!  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகள் முழக்கம்!

முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கோரிக்கைகள் முழக்கம்!

முஸ்லிம் சிறைவாசிகளையும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும், இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற இரட்டைக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தலைமைச் செயலகம் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மத அடிப்படையிலான பாகுபாடின்றி பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என்றும், இஸ்லாமியர்களுக்கான 3.5 சதவீத தனி இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்கும் வகையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்தக் கோரிக்கைகளை அரசு கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மத்திய சென்னை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook