நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா!
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் இனிய நந்தவனம் வாசகர் வட்டம் சார்பில் கவிஞர் முபாரக் எழுதிய நதிகள் செய்பவன் கவிதை நூல் வெளியீட்டு விழா திருச்சிராப்பள்ளி தமிழ் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க தலைவர் இந்திரஜித் தலைமை வகித்து நதிகள் செய்பவன் கவிதை நூலை வெளியிட திருச்சிராப்பள்ளி ராயல் லயன்ஸ் சங்க சாசன தலைவர் முகமது சபி நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார்.


